நூர் டெருஸ் விவகாரம் - பிரித்தம் விளக்கம்
வாசிப்புநேரம் -
இஸ்லாமியச் சமய ஆசிரியர் நூர் டெருஸ் (Noor Deros) பாட்டாளிக் கட்சி வேட்பாளர்களின் கூட்டத்தில் கலந்துகொண்டது குறித்து எதிர்த்தரப்புத் தலைவர் பிரித்தம் சிங் இன்று நாடாளுமன்றத்தில் விளக்கம் தந்திருக்கிறார்.
அந்தக் கூட்டத்துக்குத் திரு டெருஸ் அழைக்கப்படவில்லை என்று அவர் ஏற்கனவே சொன்னதை இன்று நாடாளுமன்றத்தில் திரு பிரித்தம் மறுத்தார்.
அவைத் தலைவர் இந்திராணி ராஜா இன்று அமைச்சர்நிலை அறிக்கை வெளியிட்டு அந்த விவகாரம் பற்றி விளக்கம் தருமாறு கேட்டுக்கொண்டார்.
அதன் பிறகு பேசிய திரு பிரித்தம், திரு டெருஸின் வருகை குறித்துப் பாட்டாளிக் கட்சித் துணைத் தலைவர் ஃபைசல் மானாப்பிற்கு முன்பே தெரியும் என்றார்.
திரு டெருஸ் இம்மாதம் 18ஆம் தேதி வெளியிட்ட காணொளியில் அந்தக் கூட்டத்துக்குத் தாம் அழைக்காமல் செல்லவில்லை என்று கூறியிருக்கிறார்.
அதைக் குறிப்பிட்ட திருவாட்டி இந்திராணி ராஜா, ஒன்று திரு ஃபைசலும் திரு பிரித்தமும் பொய் சொல்லியிருக்க வேண்டும். இல்லாவிட்டால் திரு டெருஸ் பொய் சொல்லியிருக்க வேண்டும் என்றார்.
அந்தச் சந்திப்பு ஏப்ரல் 20ஆம் தேதி இடம்பெற்றது. பொதுத் தேர்தல் மே 3ஆம் தேதி நடைபெற்றது.
இன்று விளக்கம் தந்த திரு பிரித்தம், திரு டெருஸ் அழைக்கப்பட்டதாகத் திரு ஃபைசல் தம்மிடம் தெரிவித்ததாகச் சொன்னார்.
முன்பு நாடாளுமன்றத்தில் பேசும்போது அந்தத் தகவல் தமக்குத் தெரியாது என்றார் திரு பிரித்தம்.

ஆதாரம் : CNA