Skip to main content
நாளை எதிர்த்தரப்புத் தலைவர் பிரித்தமின் மேல்முறையீடு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

நாளை எதிர்த்தரப்புத் தலைவர் பிரித்தமின் மேல்முறையீடு

வாசிப்புநேரம் -
நாளை எதிர்த்தரப்புத் தலைவர் பிரித்தமின் மேல்முறையீடு
படம்: CNA
எதிர்த்தரப்புத் தலைவர் பிரித்தம் சிங் (Pritam Singh) நாடாளுமன்றச் சிறப்புரிமைக் குழுவிடம் பொய் சொன்னதாக விதிக்கப்பட்ட தீர்ப்புக்கும் தண்டனைக்கும் எதிரான மேல்முறையீட்டு விசாரணை நாளை நடைபெறவிருக்கிறது.

கடந்த பிப்ரவரி மாதம் அவருக்கு 14,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.

நாடாளுமன்றச் சிறப்புரிமைக் குழுவிடம் பொய் சொன்னது தொடர்பாக அவர்மீது இரண்டு குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன.

ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் அதிகபட்சத் தண்டனையாக 7,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.

2021இல் முன்னாள் பாட்டாளிக் கட்சி உறுப்பினர் ரயிசா கான் (Raeesah Khan) நாடாளுமன்றத்தில் பொய் சொன்னார்.

அந்த விவகாரத்தைத் திரு பிரித்தம் சரியாகக் கையாளவில்லை என்று சொல்லப்பட்டது.

திரு பிரித்தம் திருவாட்டி கானுக்குச் சரியாக வழிகாட்டவில்லை என்றார் நீதிபதி.

திருவாட்டி கான் அவரது தவற்றை ஒப்புக்கொள்வதில் திரு பிரித்தமிற்கு விருப்பமில்லை என்பதைப்போல் தெரிவதாக அவர் சொன்னார்.

அந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து திரு பிரித்தமின் அரசியல் எதிர்காலம் குறித்துக் கேள்வி எழுந்தது.

இந்த ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் அவர் போட்டியிடலாமா என்று பலரும் வினவினர்.

அபராதம் உச்சவரம்பை எட்டவில்லை; அவர் தேர்தலில் போட்டியிடத் தடையில்லை என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்