Skip to main content
பிரித்தம் சிங் வழக்கில் நாளை தீர்ப்பு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பிரித்தம் சிங் வழக்கில் நாளை தீர்ப்பு

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரின் எதிர்க்கட்சித் தலைவர் திரு பிரித்தம் சிங்கின் வழக்கில் நாளை (17 பிப்ரவரி) தீர்ப்பளிக்கப்படும்.

நாடாளுமன்றச் சிறப்புரிமைக் குழுவிடம் அவர் பொய் சொன்னதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

சுமார் ஓராண்டுக்கு முன்னர் திரு சிங் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. சென்ற ஆண்டு (2024) நவம்பர் 8ஆம் தேதி வழக்கு விசாரணை நிறைவடைந்தது.

2021 டிசம்பர் 10ஆம், 15ஆம் தேதிகளில் நாடாளுமன்றச் சிறப்புரிமைக் குழுவிடம் இரண்டுமுறை பொய் சொன்னதாகத் திரு சிங் மீது இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

பாட்டாளிக் கட்சி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரயிசா கான் விவகாரத்தில் திரு சிங் அந்தப் பொய்யைச் சொன்னதாகக் கூறப்படுகிறது.

திரு சிங் குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்பட்டால் அதே வழக்கிற்காக மீண்டும் அவரை விசாரிக்க முடியாது.

அவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டால், அவருக்கு விதிக்கப்பட வேண்டிய தண்டனை குறித்து இருதரப்பும் விவாதிக்கும். பிறகு நீதிபதி தீர்ப்பளிப்பார்.

அதற்கு எதிராக இரண்டு வாரத்துக்குள் மேல்முறையீடு செய்யலாம்.

48 வயது திரு சிங் மீதான இரண்டு குற்றச்சாட்டுகளில், ஒன்றில் அவர் குற்றவாளி என்றும், மற்றொன்றில் அவர் குற்றமற்றவர் என்றும் தீர்ப்பளிக்கப்பட வாய்ப்புள்ளது.

சிங்கப்பூரின் அடுத்தப் பொதுத் தேர்தல் இவ்வாண்டு நவம்பர் 23ஆம் தேதிக்குள் நடைபெறவேண்டும். திரு சிங் அதில் போட்டியிடுவது தடைசெய்யப்படுமா என்பதை அறியப் பலரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்