Skip to main content
ஊட்ரம் ரோட்டில் விபத்து
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

ஊட்ரம் ரோட்டில் விபத்து - தனியார் பேருந்து ஓட்டுநர் மரணம்

வாசிப்புநேரம் -
ஊட்ரம் ரோட்டில் விபத்து - தனியார் பேருந்து ஓட்டுநர் மரணம்

படம்: stomp

வெளியீடு : 13 Mar 2025 07:56PM புதுப்பிப்பு : 13 Mar 2025 07:58PM
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

ஊட்ரம் ரோட்டில் நேற்று (12 மார்ச்) தனியார் பேருந்தும் லாரியும் மோதிக்கொண்டதில் 62 வயது பேருந்து ஓட்டுநர் மாண்டார்.

சம்பவம் குறித்து நேற்றுக் காலை சுமார் 11.20 மணிக்குத் தகவல் கிடைத்ததாகச் சிங்கப்பூர்க் காவல்துறை 8 World செய்தித்தளத்திடம் தெரிவித்தது.

விபத்து கெண்டொன்மண்ட் ரோட்டை (Cantonment Road) நோக்கிச்செல்லும் வழியில் நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

விபத்தில் சிக்கிய தனியார் பேருந்து ஓட்டுநரும் 47 வயது பயணியும் செங்காங் பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக 8 World செய்தித்தளம் குறிப்பிட்டது.

பின்னர் பேருந்து ஓட்டுநர் மாண்டது உறுதிசெய்யப்பட்டது.

காவல்துறையின் விசாரணை தொடர்கிறது.
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்