$65 கேட்ட ஓட்டுநருக்கு $650 அபராதம்
வாசிப்புநேரம் -
(படம்: CNA/Marcus Mark Ramos)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
முன்பதிவுகள் ஏதுமில்லாமல் பயணிகளைப் பெற முயன்ற தனியார் கார் ஓட்டுநருக்கு 650 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஸ்டீவன் கான் டெக் குவான் (Steven Gan Teck Guan) ஹார்பர் ஃபிரண்ட் நிலையம் அருகே முன்பதிவு இன்றிப் பயணிகளைப் பெற முயன்றார்.
அவர் பயணிகளிடம் 65 வெள்ளி கட்டணம் கேட்டதாக நிலப் போக்குவரத்து ஆணையம் புகார் பெற்றது.
2024ஆம் ஆண்டு சம்பவம் நடந்தது.
கான் டாக்சிக்காக வரிசையில் நின்றுகொண்டிருந்த பயணிகளின் கவனத்தை ஈர்க்க முயன்றதாகத் திரு ரஞ்சித் சிங் மஞ்சிட் சிங் தெரிவித்தார்.
திரு ரஞ்சிட் அவரை அணுகியதும் கான் தனது கட்டணத்தைத் தெரிவித்தார்.
Grab செயலியில் குறிப்பிடப்பட்டிருக்கும் பிரீமியம் கட்டணமான 65 வெள்ளி தான் தனது கட்டணமும் என்று கான் கூறினார்.
திரு ரஞ்சித் கானின் வாகனத்தைப் படமெடுத்து ஆணையத்திடம் கொடுத்து புகார் செய்தார்.
ஆனால் கான் அதை மறுத்தார். தாம் பயணிகளைத் தேடிச் செல்லவில்லை என்று அவர் சொன்னார்.
கான் அபராதத்திற்கு எதிராக மேல் முறையீடு செய்துள்ளார்.
அவருக்கு 3 மாதம் வரை சிறைத்தண்டனை, 1,000 வெள்ளிவரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்பட்டிருக்கலாம்.

ஆதாரம் : CNA