Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

"வரவேற்கிறேன்!"... "தயங்குகிறேன்"... தனியார் வாடகைக் காரில் முகக்கவசம் கட்டாயமில்லை என்பது குறித்த ஓட்டுநர்களின் வேறுபட்ட கருத்துகள்

வாசிப்புநேரம் -
"வரவேற்கிறேன்!"... "தயங்குகிறேன்"... தனியார் வாடகைக் காரில் முகக்கவசம் கட்டாயமில்லை என்பது குறித்த ஓட்டுநர்களின் வேறுபட்ட கருத்துகள்

(படம்: Jeremy Long/Mediacorp)

வரும் திங்கட்கிழமையிலிருந்து (29 ஆகஸ்ட்) தனியார் வாடகைக் கார், பள்ளிப் பேருந்துகள், தனியார் பேருந்துச் சேவைகளைப் பயன்படுத்தும்போது, முகக்கவசம் கட்டாயமில்லை...

இந்நிலையில்  வாடகைக் கார்ச் சேவைகளை நாடுவோர் இனி முகக்கவசத்தைத் தொடர்ந்து அணிந்திருப்பதை ஓட்டுநர்கள் விரும்புகிறார்களா என்பதைக் கண்டறிய ஓட்டுநர்கள் சிலரிடம் பேசியது 'செய்தி'. 

(படம்: Calvin Oh/CNA)

"நான் வயதானவன். Booster ஊசியெல்லாம் போட்டுவிட்டேன். இருந்தாலும் மறுபடியும் எனக்குக் கோவிட் நோய்த்தொற்று ஏற்படலாம்"

என்கிறார் பல்லாண்டுகளாக டாக்சி ஓட்டிவரும் திரு. ராமலிங்கம். 

பயணிகளை முகக்கவசம் அணியும்படி  ஊக்குவிக்கப்போவதாக அவர் கூறினார்.

என்றாலும் பயணிகளிடம் முகக்கவசம் அணியும்படி வற்புறுத்தப்போவதில்லை என்று திரு. ராமலிங்கம் தெரிவித்தார். 

(கோப்புப் படம்: Jeremy Long)

"முன்னோக்கிச் செல்லும் நேரம் வந்துவிட்டது! நான் இதை வரவேற்கிறேன்"

என்கிறார் Grab ஓட்டுநர் திரு. கணேஷ். 

மக்கள் முகக்கவசமின்றித் தனியார் வாடகைக் கார்களில் பயணம் செய்வதை ஆதரிப்பதாக அவர் சொல்கிறார். 

ஒவ்வொரு பயணத்துக்குப் பிறகும் காரைச் சுத்தப்படுத்தி, கிருமிகளை நீக்குவது ஓட்டுநர்களின் பொறுப்பு என்பதைத் திரு. கணேஷ் சுட்டினார். 

(கோப்புப் படம்: CNA/Gaya Chandramohan)

"நான் முகக்கவசத்தை அணிய விரும்புகிறேன். ஆனால் பயணிகளை வற்புறுத்த மாட்டேன்!"

என்கிறார் Grab ஓட்டுநர் திரு. சரவணன். 

நோய்வாய்ப்பட்ட பயணிகள் முகக்கவசம் அணிந்திருந்தால் ஓட்டுநர்களுக்குக் கிருமி பரவாது என்பதை அவர் சுட்டினார். 

அவருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டால் அவரது வருமானமும் குடும்பமும் பாதிக்கப்படக்கூடும் என்று சொன்னார் திரு. சரவணன். 

(Jeremy Long)

"அரசாங்கத்தின் முடிவுகள் மீது நம்பிக்கை உள்ளது" 

என்கிறார் Gojek ஓட்டுநர் திரு. சத்திஷ். 

அரசாங்கம் எதைச் செய்தாலும் திட்டமிட்டுச் செய்யும். சூழலைத் தீரவிசாரித்த பின்னரே அது இந்த முடிவுக்கு வந்திருக்கும் என்று திரு. சத்திஷ் நம்பிக்கை தெரிவித்தார். 

இருப்பினும் நோய்வாய்ப்பட்டதைப் போல் காணப்படும் பயணிகளை முகக்கவசமின்றிக் காரில் ஏற்றிச் செல்வதைத் தவிர்க்கப்போவதாக அவர் கூறினார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்