Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

"சவாலான தேர்வைக் கையாளத் துணைப்பாட வகுப்புகள் மட்டுமே வழியல்ல": மூத்த துணையமைச்சர் ஜனில்

வாசிப்புநேரம் -
"சவாலான தேர்வைக் கையாளத் துணைப்பாட வகுப்புகள் மட்டுமே வழியல்ல": மூத்த துணையமைச்சர் ஜனில்

படம்: Hanidah Amin

சவால்மிக்க தேர்வுக் கேள்விகளைக் கையாளத் துணைப்பாட வகுப்புகள் மட்டுமே வழியல்ல.

கல்விக்கான மூத்த துணையமைச்சர் ஜனில் புதுச்சேரி (Janil Puthucheary) அவ்வாறு கூறியிருக்கிறார்.

தொடக்கப்பள்ளி இறுதித் தேர்வுத்தாள்களின் கடின நிலை, அது துணைப்பாட வகுப்புகளுக்குச் செல்லக்கூடிய மாணவர்களுக்குப் பயனளிக்கிறதா என்று நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

ஒவ்வொரு பாடத்திலும் சவால்மிக்க கேள்விகள் சுமார் 15 விழுக்காடு இருக்கும் என்றார் டாக்டர் ஜனில்.

அனைத்துக் கேள்விகளும் பாடத்திட்டத்தை மையமாக வைத்தே அமைவதாக அவர் தெரிவித்தார்.

பலதரப்பட்ட கடின நிலைகளைக் கொண்ட கேள்விகள் தேர்வில் இருப்பது அவசியம் என்றார் டாக்டர் ஜனில்.

அது வெவ்வேறு திறன்கொண்ட மாணவர்கள் தங்கள் ஆற்றலை வெளிப்படுத்த உதவும் என்றார் அவர்.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்