Skip to main content
சிங்கப்பூரில் 5 காசு நிறுத்தப்படுமா?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் 5 காசு நிறுத்தப்படுமா?

வாசிப்புநேரம் -
சிங்கப்பூர் நாணய ஆணையம் கடந்த 5 ஆண்டுகளில் எந்தப் புதிய 5 காசுகளையும் தயாரிக்கவில்லை என்று துணைப்பிரதமர் கான் கிம் யோங் (Gan Kim Yong) கூறியுள்ளார்.

புதிய 5 காசுகளைத் தயாரிக்கத் திட்டமில்லை என்றும் அவர் கூறினார்.

5 காசுகளைத் தயாரிக்கும் செலவு, அதன் புழக்கம் ஆகியவை பற்றி நாடாளுமன்றத்தில் கேள்வி தாக்கல் செய்யப்பட்டது.

அதற்கு எழுத்து வடிவில் பதிலளிக்கப்பட்டது.

5 காசுகளைப் புழக்கத்திலிருந்து நிறுத்தத் திட்டமில்லை என்று அமைச்சர் கான் சொன்னார்.

பொதுமக்களிடையே அதற்கான தேவை தொடர்கிறது.

பேரங்காடிகள், உணவகங்கள் ஆகியவைப் பொருள்களை 5 காசு விலையை உள்ளடக்கும் வகையில் விற்பனை செய்கின்றன.

உதாரணத்திற்கு சில பொருள்கள் $1.95, $10.95 போன்ற விலைகளில் விற்கப்படுகின்றன.

மேலும் பைகளுக்கு 5 காசு முதல் 10 காசு வரை வாங்கப்படுகிறது.

எனவே 5 காசுகளைப் புழக்கத்திலிருந்து அகற்றினால் வர்த்தகர்கள் விலையை உயர்த்தும் வாய்ப்பு உள்ளது. (உதாரணத்திற்கு 1.95 வெள்ளி 2 வெள்ளியாகலாம்)

வாடிக்கையாளர்களுக்குச் செலவு அதிகரிக்கலாம் என்றார் திரு கான்.
ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்