Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

'நம்பிக்கை என்பது வேண்டும், நம் வாழ்வில்... லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்!' - அழகிய ஓவியங்களைப் படைக்கும் உடற்குறை உள்ளவர்

"நான் பள்ளிக்குச் சென்றபோது, என் நண்பர்கள் எல்லாரும் படி ஏறி வகுப்பறையை விரைவில் அடைந்தனர். நான் மட்டும் பின்னால் இருந்தபடி மிக மெதுவாகப் படியேறி வகுப்புக்குச் சென்றேன்... கால்விரல்களில் உடல் எடையைச் சுமத்தி, தள்ளாடித் தள்ளாடி நடந்தேன்"

வாசிப்புநேரம் -

நான் பள்ளிக்குச் சென்றபோது, என் நண்பர்கள் எல்லாரும் படி ஏறி வகுப்பறையை விரைவில் அடைந்தனர். நான் மட்டும் பின்னால் இருந்தபடி மிக மெதுவாகப் படியேறி வகுப்புக்குச் சென்றேன்... கால்விரல்களில் உடல் எடையைச் சுமத்தி, தள்ளாடித் தள்ளாடி நடந்தேன்

திரு முஹம்மது சைபுடீன் பின் அப்துல் சலீமுக்கு Duchenne Muscular Dystrophy எனும் தசைநார்த் தேய்வு இருப்பதால் சிறுவயதிலிருந்தே அவரது கைகள், கால்களின் செயல்பாடு படிப்படியாகக் குறைந்தது.

படம்: Saifudeen

அவரது வாழ்க்கைப் பயணம் என்ன? உடற்குறை அளிக்கும் சவால்களை அவர் எவ்வாறு எதிர்நோக்கினார்? - இவற்றைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள 'செய்தி' அவரிடம் பேசியது.

திரு சைபுடீனுக்கு அத்தகைய உடற்குறை உள்ளதென அவருக்கு 7 வயது இருந்தபோது மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.

பிறரைத் தொந்தரவு செய்ய விரும்பவில்லை!

அவருக்கு உதவிசெய்ய அவரது பெற்றோர் பல வழிகளைத் தேடியும், அதற்கான தீர்வைக் கண்டறிய முடியவில்லை. அவர் சக்கர நாற்காலியைச் சார்ந்திருக்கவேண்டிய நிலை வந்தது.

பள்ளியில் மற்ற மாணவர்களின் உதவியைச் சார்ந்து இருப்பதை விரும்பாததால் அவர் பள்ளிக்குச் செல்வதை நிறுத்திவிட்டார்.

நான்காண்டு காலமாக எந்த விதமான குறிக்கோளுமின்றி வீட்டில் இருந்த திரு சைபுடீனுக்கு அவரது சகோதரி ஒரு புதிய பாதையைக் காட்டினார்.

Muscular Dystrophy Association (Singapore) - MDAS எனும் தசைநார் தேயும் பிரச்சினை உள்ளவர்களுக்கான அமைப்பை அவர் திரு சைபுடீனுக்கு அறிமுகம் செய்தார்.

படம்: MDAS 

படம்: MDAS 

அதில் சேர்ந்துகொண்ட அவர், அமைப்பிலிருந்து ஆதரவு பெற்று அவரது ஓவிய ஆர்வத்தை வளர்த்துக்கொண்டார்.

படம்: MDAS 

படம்: MDAS 

அமைப்பில், என்னைப் போல் இருப்பவர்கள் பலரையும் நான் கண்டேன்! அவர்கள் வாழ்க்கையில் சாதிக்கும் பலவற்றைக் கண்டவுடன் எனக்கும் சாதிக்கவேண்டும் என்ற சிந்தனை ஏற்பட்டது

என்றார் அவர்.

பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்வது, உணவு வாங்குவது, பிறருடன் நட்பாக இருப்பது போன்ற பலவற்றை அமைப்பின் மூலம் கற்றுக்கொண்டதாகவும் அவர் மகிழ்ச்சியுடன் சொன்னார்.

படம்: MDAS 

படம்: MDAS 

இவ்வாண்டின் உடற்குறையுள்ளவர்களின் கலைத்திறனைக் கொண்டாடும் Shaping Hearts நிகழ்வில் கலந்துகொள்ளவிருக்கும் அவர், சென்ற ஆண்டு அதிபர் நட்சத்திர நிதித்திரட்டு நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டுள்ளார்.

படம்: MDAS 

படம்: MDAS 

ஓவியக் கலையில் அவர் காட்டும் ஈடுபாட்டினால் பல அழகிய ஓவியங்களை அவர் படைத்துள்ளார். அத்தகைய ஓவியங்களைப் படைப்பதன் மூலம் தன்னம்பிக்கை கூடுகிறது என்று அவர் சொன்னார்.

படம்: MDAS 

படம்: MDAS 

உங்களுக்குப் பிடித்தமானதைச் செய்யப் பயப்படவேண்டாம்! முயற்சி எடுத்துச் செய்யுங்கள்!

யார் வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் செய்யமுடியும்... முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம்!

எனச் செய்தியுடன் பகிர்ந்தார் திரு சைபுடீன். அவரது அந்த முழக்க வரியை மனத்தில் கொண்டு தொடர்ந்து செயல்பட்டால் வெற்றி நமதே!  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்