Skip to main content
பொதுத்தேர்தலில் இனி போட்டியிடமாட்டேன்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

பொதுத்தேர்தலில் இனி போட்டியிடமாட்டேன் - சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சித் தலைவர் டான் செங் பொக்

வாசிப்புநேரம் -
பொதுத்தேர்தலில் இனி போட்டியிடமாட்டேன் - சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சித் தலைவர் டான் செங் பொக்

(படம்: CNA/Wallace Woon)

சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் நிறுவனரும் தலைவருமான டான் செங் பொக் இனி பொதுத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என அறிவித்துள்ளார்.

இருப்பினும் அவர் தொடர்ந்து கட்சியில் இருப்பார் என்று கூறினார்.

வெஸ்ட் கோஸ்ட் சந்தையில் இன்று மக்களைச் சந்தித்த அவர், கட்சிக்கு அவர்கள் தந்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார்.

அண்மையில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் வெஸ்ட் கோஸ்ட்- ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதியில் டாக்டர் டான் தலைமையில் போட்டியிட்ட அணி மக்கள் செயல் கட்சி அணியிடம் தோல்விகண்டது.

அதனால், அவரது அணியில் போட்டியிட்ட கட்சியின் தலைமைச் செயலாளர் லியோங் மன் வாய் (Leong Mun Wai), துணைத்தலைவர் ஹேசல் புவா (Hazel Poa) ஆகியோர் தங்கள் தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தனர்.

தோல்வியுற்றாலும் நம்பிக்கை இழக்காமல் கட்சி தொடர்ந்து செயல்படும் என்று டாக்டர் டான் கூறினார்.

இளைய அணியுடன் மீண்டும் அடுத்த போதுத்தேர்தலில் மக்களின் நம்பிக்கையைப் பெறக் கட்சி கடுமையாக உழைக்கும் என்றார் அவர்.
ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்