Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வீட்டு விலை மிதமிஞ்சி உயர்வதைத் தடுக்கும் புதிய நடவடிக்கைகள் - யாருக்கு அதிக பாதிப்பு?

சிங்கப்பூரில், வீட்டு விலை மிதமிஞ்சி உயர்வதைத் தடுக்கும் புதிய நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில், வீட்டு விலை மிதமிஞ்சி உயர்வதைத் தடுக்கும் புதிய நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதை அடுத்து, இங்குள்ள சொத்து நிறுவனங்களின் பங்குகள் சரிந்துள்ளன.

எனினும், புதிய நடவடிக்கைகளால் பெரிய தாக்கம் ஏதும் இருக்காது என்கிறார் SRI Pte Ltd நிறுவனத்தில் சொத்து முகவராகவும் வட்டாரத் துணை இயக்குநராகவும் பணிபுரியும் அன்னி சியோவிஸ் டியூ (Annie Cheovys Tiew).

தற்போது வீடு வாங்குபவர்களில் பெரும்பாலானோர் சிங்கப்பூர்க் குடிமக்கள் அல்லது நிரந்தரவாசிகள். அவர்கள் முதல்முறை வீடு வாங்குபவர்கள்,

என்று அவர் கூறினார்.

அதனால், புதிய நடவடிக்கைகள் அவர்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தாது என்று அவர் சொன்னார்.

சிங்கப்பூரில் வீடு வாங்கும் வெளிநாட்டினரே அதிக பாதிப்புக்கு ஆளாவர் என்றார் திருவாட்டி டியூ.

வெளிநாட்டவருக்கான முத்திரைக் கட்டணம், வீட்டு விலையில் 20 விழுக்காட்டிலிருந்து, 30 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளதை அவர் சுட்டினார்.

மொத்தக் கடன் அடைப்பு விகிதம்

மொத்தக் கடன் அடைப்பு விகிதம், 60இல் இருந்து 55 விழுக்காடாகக் குறைக்கப்படுகிறது.

அதன் தாக்கமும் பெரிய அளவில் இருக்காது என்றார் திருவாட்டி டியூ.

5 விழுக்காட்டுக் குறைவால், தேவைப்படும் வருமானத்தில் அவ்வளவு பெரிய ஏற்றம் ஏற்படவில்லை,

என்றார் அவர்.

வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் கடன் தொகை

வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளை வாங்குவோர், கழகத்திடம் இருந்து பெறக்கூடிய அதிகபட்சக் கடன் தொகை, வீட்டு விலையில் 90 விழுக்காட்டிலிருந்து 85 விழுக்காடாகக் குறைக்கப்படும்.

வீடு வாங்க வங்கியிடமிருந்து கடன் பெறுபவர்களை அது பாதிக்காது என்றார் Singapore Realtors Inc நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி ராமா.

ஆனால், கழகத்திடமிருந்து கடன் பெறத் தகுதி பெறுபவர்கள் இனிமேல் ரொக்கமாக அதிகப் பணத்தைச் செலுத்த வேண்டிவரும். அல்லது அவர்கள் தங்களது மத்திய சேமநிதிக் கணக்கிலிருந்து அதிகத் தொகையைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் எழலாம்,

என்று திரு. ராமா கூறினார்.

ஆக மொத்தத்தில், புதிய அறிவிப்பால் பெரிய பாதிப்பு ஏதும் நேர வாய்ப்பில்லை என்றார் அவர்.

இரண்டாவது வீட்டை வாங்கும் செல்வந்தர்கள், வெளிநாட்டினர், சொத்து மேம்பாட்டாளர்கள்-ஆகியோரை இலக்காகக் கொண்டே மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்