Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

தொழிலதிபர் ஓங் பெங் செங் ஜூலை 3ஆம் தேதி குற்றத்தை ஒப்புக்கொள்வார்

வாசிப்புநேரம் -
தொழிலதிபர் ஓங் பெங் செங் ஜூலை 3ஆம் தேதி குற்றத்தை ஒப்புக்கொள்வார்

படம்: AFP/Roslan Rahman

தொழிலதிபர் ஓங் பெங் செங் ஜூலை 3ஆம் தேதி குற்றத்தை ஒப்புக்கொள்ளவிருக்கிறார்.

முன்னையப் போக்குவரத்து அமைச்சர் எஸ் ஈஸ்வரன் மீதான வழக்கின் தொடர்பில் அவர் மீது இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருக்கின்றன.

அவர் இரண்டு குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொள்வாரா என்பதை நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிடவில்லை.

அவரது $800,000 பிணை நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

ஓங் எலும்பு மஜ்ஜைப் புற்றுநோய்க்காகச் சிகிச்சை பெற்றுவருகிறார். அவர் முன்னர் வெளிநாட்டுக்குச் சென்று சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டார்.

முதலில் அவர் ஏப்ரல் 2ஆம் தேதி குற்றத்தை ஒப்புக்கொள்வதாக இருந்தது. ஆனால் மருத்துவக் காரணங்களால் அது ஒத்திவைக்கப்பட்டது.

ஓங் முன்னாள் அமைச்சர் ஈஸ்வரனுக்கு உடந்தையாக இருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

ஓங் Formula 1 கார்ப்பந்தயத்தை 2008ஆம் ஆண்டு சிங்கப்பூருக்குக் கொண்டுவந்தார்.
ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்