Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

எல்லை தாண்டிய புகைமூட்டச் சட்டத்தில் திருத்தம் : அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப் பரிந்துரை

வாசிப்புநேரம் -
எல்லை தாண்டிய புகைமூட்டச் சட்டத்தில் திருத்தம் : அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப் பரிந்துரை

CNA/Mak Jia Kee

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

வெளியீடு : 04 Nov 2026 03:16PM புதுப்பிப்பு : 04 Nov 2026 06:13PM


எல்லை தாண்டிய புகைமூட்டச் சட்டத்தில் திருத்தம் செய்ய நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.

அதன்படி சுற்றுச்சூழல் பாதுகாப்புத் தலைமை இயக்குநரும் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகள் சிலரும் சந்தேகத்துக்குரியவர்களைக் கைதுசெய்ய அதிகாரம் வழங்கப்படலாம்.

சம்பந்தப்பட்ட நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் இங்கு இல்லாவிட்டாலும் விசாரணையைத் தொடர அது வழிவகுக்கலாம்.

இணையம் அல்லது ஊடகங்கள் வழியாக சட்ட ஆவணங்களை அனுப்பவும் திருத்தம் வகைசெய்யலாம்.

மேலும் புகைமூட்டத்தால் சிங்கப்பூர் பாதிக்கப்படும் அபாயம் இருந்தாலே அதிகாரிகள் தலையிட முடியும்.

சிங்கப்பூருக்குள் புகைமூட்டம் பரவும் வரை காத்திருக்கத் தேவையில்லை.

காட்டுத்தீக்கு மற்றொருவர் காரணம் எனக் கூறும் நிறுவனங்கள், தீயைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் நியாயமான நடவடிக்கை எடுத்ததை நிரூபிக்க வேண்டும்.

பரிந்துரைக்கப்பட்ட மாற்றங்கள் குறித்து நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ (Grace Fu) நாடாளுமன்றத்தில் பேசினார்.

வெளிநாட்டுத் தரப்புகள் மீது சிங்கப்பூர் எளிதாக அமலாக்க நடவடிக்கை மேற்கொள்ளமுடியாது;

சட்ட அறிக்கை கொடுக்கப்பட்டாலும் நிறுவன அதிகாரிகள் ஒத்துழைக்கவும்  சிங்கப்பூருக்கு வரவும் மறுக்கலாம்.  

அந்நிலையில் நடவடிக்கை எடுப்பது கடினம் என்று  அமைச்சர் ஃபூ கூறினார்.

எனவே எல்லை தாண்டிய புகைமூட்டச் சட்டத்தை வலுப்படுத்துவது முக்கியம் என்றார் அவர்.

ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்