Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

ஊழியர் மரணம்: அபராதத்துக்கு இணங்கிய நிறுவனம், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்கிறது

வாசிப்புநேரம் -
ஊழியர் மரணம்: அபராதத்துக்கு இணங்கிய நிறுவனம், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்கிறது

படம்: AFP/Roslan Rahman

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

துறைமுக நிறுவனம் PSA அதன் ஊழியரின் மரணம் தொடர்பில் அளிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்கிறது.

அதற்கு 225,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டது. நிறுவனம் அந்தத் தொகையை முழுமையாகச் செலுத்திவிட்டது.

எனினும் தன்னைக் குற்றவாளி என்று அளிக்கப்பட்ட தீர்ப்பை நிறுவனம் ஏற்றுக்கொள்ள மறுத்தது.

என்ன நடந்தது?

2017ஆம் ஆண்டு செப்டம்பரில் PSA நிறுவனத்தின் ஊழியர் பாரந்தூக்கியைச் சோதிக்கும்போது பீப்பாய்க்கும் தள்ளுவண்டி மேடைக்கும் நடுவில் சிக்கி நசுக்கப்பட்டு மாண்டார்.

அப்போது அவருக்கு வயது 29.

நீதிமன்ற விசாரணையின்போது, PSA ஊழியர்களைப் பாதுகாக்கப் போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.

தீர்ப்பை மேல்முறையீடு செய்த PSA, ஊழியர்களின் பாதுகாப்பு அதன் அன்றாடப் பணியின் அடிப்படை என்று பதிலளித்திருக்கிறது.

வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரச் சட்டத்தின்கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 500,000 வெள்ளிவரை அபராதம் விதிக்கப்படலாம்.
ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்