PSLE தேர்வுக்குத் தாமதமாகச் செல்லும் மாணவர்களுக்குப் பாதிப்பு இருக்காது: SEAB
இன்று PSLE தேர்வு ஆரம்பமாகியுள்ளது.
நேற்று (25 செப்டம்பர்) கிழக்கு மேற்கு ரயில் பாதையில் ஏற்பட்ட தடங்கல் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று நீடிக்கிறது.
அதனைக் கருத்தில்கொண்டு PSLE தேர்வுக்குத் தாமதமாகச் செல்லும் மாணவர்களுக்குப் பாதிப்பு இருக்காது என்று SEAB எனப்படும் சிங்கப்பூர்த் தேர்வுகள், மதிப்பீட்டுக் கழகம் தெரிவித்திருக்கிறது.
ரயில் சேவைத் தடங்கலின் காரணத்தினால் PSLE தேர்வுக்குத் தாமதமாகச் செல்லும் மாணவர்கள், தேர்வு முடிவதற்குள், பள்ளியைச் சென்றடைந்தால், தேர்வு எழுதுவதற்கான முழு நேரமும் அவர்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
ஏற்கெனவே நடப்பில் இருக்கும் ஏற்பாடுகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.
ரயில் சேவைத் தடங்கலின் காரணத்தினால் தாமதத்தை எதிர்நோக்கும் மாணவர்கள் பள்ளிக்குச் செல்லும் வழியில் பள்ளியிடம் விவரம் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.