Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் பல இடங்களில் திடீர் வெள்ள எச்சரிக்கை: பொதுப் பயனீட்டுக் கழகம்

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் இன்று (27 பிப்ரவரி) மாலை பெய்த கனத்த மழையால் பொதுப் பயனீட்டுக் கழகம் பல இடங்களில் திடீர் வெள்ள எச்சரிக்கை விடுத்துள்ளது.

உபி அவென்யூ 3 - யுனோஸ் லிங்க் (Ubi Avenue 3 - Euons Link) சந்திப்பு, தீவு விரைவுச் சாலை (Pan Island Expressway), பிடோக் நார்த் அவென்யூ 3 (Bedok North Avenue 3) ஆகிய இடங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.

உதவி வழங்க அதிகாரிகள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகக் கழகம் மதியம் 2.20 மணிவாக்கில் Facebook-இல் தகவல் அளித்திருந்தது.

2.30 மணியளவில் பிடோக் நார்த் அவென்யூ 3இல் வெள்ளம் வடியத் தொடங்கியதாகக் கழகம் தெரிவித்தது.

2.40 மணியளவில் உபி அவென்யூ 3 - யுனோஸ் லிங்க் சந்திப்பிலும் வெள்ளம் வடியத் தொடங்கியதாக அது தெரிவித்தது.

பிடோக் கால்வாய் (Bedok Canal), ஜாலான் நிப்பா (Jalan Nipah), பிடோக் ரோடு (Bedok Road), பிடோக் கார்டன் (Bedok Garden), ஜாலான் செம்பாக்கா குனிங் (Jalan Chempaka Kuning) ஆகிய இடங்களிலும் திடீர் வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனத்த மழையால் அங் மோ கியோ அவென்யூ 5 (Ang Mo Kio Avenue 5), தஞ்சோங் பகார் ரோடு (Tanjong Pagar Road), மெக்பர்சன் ரோடு (Macpherson Road), பிளேஃபேர் ரோடு (Playfair Road), பேஷோர் பார்க் (Bayshore Park), உபி அவென்யூ 2 (Ubi Avenue 2) ஆகிய இடங்களில் உள்ள வடிகால்களில் நீரின் அளவு 90 விழுக்காட்டை எட்டியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த இடங்களைத் தவிர்க்குமாறு கழகம் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

செய்தி செயலி பல்வேறு புதிய அம்சங்களுடன் புதுப்பொலிவு பெற்றுள்ளது.  இப்போதே ‘Update’ செய்யுங்கள் அல்லது ‘Mediacorp Seithi’ செயலியைப் பதிவிறக்கம் செய்யுங்கள்! 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்