சிங்கப்பூரில் சுத்தம் - மக்களின் மனநிறைவு குறைந்தது
CNA
This audio is generated by an AI tool.
சிங்கப்பூரில் தூய்மை குறித்த மக்களின் மனநிறைவு குறைந்துள்ளது.
சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம் நடத்திய கருத்தாய்வில் 91 விழுக்காட்டினர் மனநிறைவடைவதாகத் தெரிவித்துள்ளனர்.
2023இல் அது 94 விழுக்காடாக இருந்தது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்கும் இவ்வாண்டு ஏப்ரல் மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் சுமார் 2,000 சிங்கப்பூர்வாசிகளிடம் கருத்தாய்வு நடத்தப்பட்டது.
பொதுப்போக்குவரத்து, பொழுதுபோக்கு வசதிகள், பயனீட்டாளார் பாதைகள், குடியிருப்புப் பகுதிகள், உணவு-பானக் கடைகள் ஆகிய 6 பிரிவுகளிலும் மனநிறைவு குறைந்ததாகத் தெரியவந்தது.
அவற்றில் குடியிருப்பு இடங்களின் சுத்தம் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
அதில் சுமார் 87 விழுக்காட்டினர் மனநிறைவு தெரிவித்தனர்.
2023ஐக் காட்டிலும் அது சுமார் 6 விழுக்காடு குறைவு.
குறிப்பாக வெற்றுத்தளங்கள், பொது நடைபாதைகள், மின்தூக்கி இடங்களில் தூய்மை குறித்து அதிருப்தி கூடியதாகத் தெரிகிறது.
சிங்கப்பூரின் தூய்மைக்கு அதிகத் தரம் இருப்பதால் மக்களின் எதிர்பார்ப்புகள் கூடியிருக்கலாம்; அதுவே மக்களின் அதிருப்திக்குக் காரணமாக இருக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
குறிப்பாகக் குடியிருப்பு இடங்களில் பொருள் விநியோகம் அதிகரித்துள்ளதால் கழிவு சேர்ந்திருக்கலாம்..
ஊழியர்களுக்கான செலவு அதிகரிக்கும் நிலையில் துப்புரவுச் சேவைகள் குறையின்றி வழங்கப்படுகின்றனவா என்பதைக் கவனிக்கவேண்டும் என்றும் ஆய்வாளர்கள் கூறினர்.