பொது மருத்துவமனைகளில் தொழில்நுட்பக் கோளாறு: எந்தெந்தச் சேவைகள் பாதிக்கப்படலாம்?
வாசிப்புநேரம் -
(படம்: CNA)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
மருத்துவரைச் சந்திக்க முன்பதிவு செய்வது, மருத்துவமனையில் வருகையைப் பதிவு செய்வது, மருந்துகளைப் பெறுவது, கட்டணம் செலுத்துவது...
இன்று இவற்றில் சிலவற்றைச் செய்ய சிங்கப்பூரின் பொதுச் சுகாதார நிலையங்களில் நோயாளிகள் கூடுதல் நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது.
NHG Health, தேசியப் பல்கலைக்கழகச் சுகாதாரக் கட்டமைப்பு (NUHS), SingHealth ஆகிய மூன்று பொதுச் சுகாதாரக் குழுமங்களிலும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.
காலை சுமார் 9 மணியளவில் NHG Health குழுமத்தின் தொலைபேசி அழைப்பு மையங்களில் முதலில் கோளாறு ஏற்பட்டது.
என்னென்ன பாதிக்கப்பட்டன?
மருத்துவச் சந்திப்புகளைப் பதிவு செய்வது அல்லது மாற்றுவது...
வருகையாளர்களைப் பதிவு செய்வது...
கட்டணம் செலுத்துவது...
சில மருத்துவ நிலையங்களின் அழைப்பு நிலையங்களையும் தொடர்புகொள்ள முடியவில்லை.
சில சுயசேவை இயந்திரங்களும் செயல்படவில்லை.
மருத்துவச் சேவையே நின்றுவிடுமா?
இல்லை...
இன்றைய கோளாற்றின்போதும் நோயாளிகள் தொடர்ந்து மருத்துவர்களைச் சந்தித்தனர்.
ஆனால் பதிவு, மருந்து விநியோகம், கட்டணம் போன்ற சேவைகளில் தாமதம் ஏற்படலாம்.
எந்தக் கட்டமைப்பு பாதிக்கப்படுகிறது என்பதைப் பொறுத்து அதன் தாக்கமும் மாறுபடும்.
நோயாளிகள் என்ன செய்யலாம்?
மருத்துவமனைக்குச் செல்வதற்குமுன் சம்பந்தப்பட்ட சுகாதாரக் குழுமத்தின் அதிகாரபூர்வ அறிவிப்புகளைப் பார்ப்பது நல்லது.
HealthHub அல்லது அந்தந்தச் சுகாதாரக் குழுமத்தின் செயலிகள் செயல்பட்டால் மருத்துவச் சந்திப்பு அல்லது கட்டணம் தொடர்பான சில சேவைகளை அவற்றின் மூலம் மேற்கொள்ளலாம்.
மருத்துவமனைகள் அறிவிக்கும் மாற்று ஏற்பாடுகளையும் நோயாளிகள் கவனிக்கலாம்.
இணையத் தாக்குதலா?
தொழில்நுட்பக் கோளாறு என்றாலே இணையத் தாக்குதல் என்று பொருளல்ல.
இணைப்புச் சிக்கல், மென்பொருள் அல்லது தொழில்நுட்பக் கட்டமைப்பில் ஏற்படும் பிரச்சினைகளாலும் சேவைகள் பாதிக்கப்படலாம்.
இன்றைய கோளாறு இணையத் தாக்குதலால் ஏற்பட்டதற்கான அறிகுறி ஏதுமில்லை என்று தேசியச் சுகாதாரத் தொழில்நுட்ப அமைப்பான Synapxe தெரிவித்துள்ளது.
தொழில்நுட்பக் குழுக்கள் கோளாற்றைச் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளன.
பிற்பகலில் சில சேவைகள் படிப்படியாக வழக்கநிலைக்குத் திரும்பத் தொடங்கின.

ஆதாரம் : Mediacorp Seithi