Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

"குடியிருப்புப் பேட்டைகளில் உடும்புகளைக் கண்டு அஞ்சவேண்டாம்! அவை கூச்ச சுபாவம் கொண்டவை" - விலங்கு நிபுணர்கள்

வாசிப்புநேரம் -
சிங்கப்பூர்க் குடியிருப்புப் பேட்டைகளில் அண்மைக்காலமாக உடும்புகள் சுற்றித்திரிகின்றன.

அவற்றைக் கண்டு பயப்படவேண்டாம், அவை கூச்ச சுபாவம் உடையவை என்றும், மனிதர்களுக்கு அவற்றால் தீங்கு வராது என்றும் கூறுகின்றனர் விலங்கு நிபுணர்கள்.

சென்ற வாரம் மட்டும் சிங்கப்பூரின் இரண்டு குடியிருப்புப் பேட்டைகளில் உடும்புகள் காணப்பட்டன.

பிடோக் நார்த்தின் (Bedok North) புளோக் 428இன் இரண்டாம் மாடியில் உள்ள வீட்டின் வெளியே மலாயன் நீர் உடும்பு (Malayan water monitor) காணப்பட்டது.

பொங்கோல் அடுக்குமாடிக் கட்டடத்தின் மூன்றாம் மாடியிலுள்ள சன்னல் விளிம்பிலும் மின்தூக்கித் தளத்திலும் ஒரு மலாயன் நீர் உடும்பு காணப்பட்டது.

உடும்புகள் நகர்ப்புறங்களில் வாழக் கற்றுக்கொண்டுள்ளதாகவும், கால்வாய்களில் அதிகம் வாழ்வதாகவும் நன்யாங் பல்கலைக்கழக விரிவுரையாளர் டாக்டர் ஷோன் லம் (Dr Shawn Lum) கூறினார்.

பிடோக் நார்த் குடியிருப்புப் பேட்டையில் காணப்பட்ட உடும்பு அருகில் இருக்கும் பிடோக் நகரப் பூங்கா அல்லது பிடோக் நீர்த்தேகத்தில் வாழும் ஒன்றாக இருந்திருக்கலாம் என்று விலங்கு ஆய்வு கற்றல் அமைப்பு (ACRES) அதிகாரி திரு. கலைவாணன் கூறினார்.

 
ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்