Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பெண்ணைக் காப்பாற்ற, திருட்டுச் சம்பவங்களைக் கண்டுபிடிக்க உதவிய பொதுமக்களுக்கு விருது

வாசிப்புநேரம் -

பொதுமக்களுக்கு ஆற்றிய தன்னலமற்ற சேவைக்காக 6 பேருக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 3 அமைப்புகளுக்கும், ஓர் ஊழியருக்கும் விருதளிக்கப்பட்டது.

சிங்கப்பூர் காவல்துறையுடன் இணைந்து அவர்கள் சமூகத்துக்கு ஆற்றிய தொண்டு பாராட்டப்பட்டது.

உலு பாண்டான் பூங்காவில் ஒரு பெண்ணை மானபங்கம் செய்யும் நோக்கத்துடன் நடந்துகொண்ட ஆடவரைக் காவல்துறையுடன் இணைந்து துரத்திப் பிடிக்க உதவிய திரு. வினோத் ராஜேந்திரன், குமாரி ரமிஸா பானு அப்துல் ரஹ்மான் ஆகியோர் அவர்களில் இருவர்.

மற்றொரு சம்பவத்தில், பாதுகாப்பு இடைவெளி அதிகாரி ஒருவரிடம் முரட்டுத்தனமாக நடந்துகொண்டு, அத்துமீறிய ஆடவரைக் கட்டுப்படுத்த உதவிய திரு. இங் ஷெங் சாவ் பெனடிக்ட் (Ng Sheng Chao Benedict ) விருது பெற்றார்.

72 காமன்வெல்த் அவென்யூவில் நடந்த திருட்டைக் கண்டுபிடிக்க உதவிய திரு. அழகர் ரவியும் ஒரு கடையில் நடந்த திருட்டைக் கண்டுபிடிக்கக் காவல்துறைக்கு உதவிய திரு. முகமது ஷுபானும் இன்றைய விருது நிகழ்ச்சியில் கௌரவிக்கப்பட்டனர்.

ஜூரோங் ஈஸ்ட் அவென்யூ ஒன்றில் உள்ளாடைகளைத் திருடிய நபரைக் கண்டுபிடிக்க உதவிய திரு. லிம் வெய் ஹாவ் (Lim Wei Hao) என்பவருக்கும் விருது வழங்கப்பட்டது.

FairPrice Xtra @ VivoCity;
Shopee Singapore;
Resorts World Sentosa


ஆகிய 3 அமைப்புகளும் குற்றத் தடுப்பில் உதவும் சமூகப் பங்காளிகள் விருதைப் பெற்றன.

NTUC Fairpriceஇன் பாதுகாவல் அதிகாரியாகப் பணிபுரியும் திரு. ஆன்ட்டனி சாங் டின் ஹூவி (Anthony Chang Din Hwee) குற்றங்களைத் தடுக்க கிளமெண்டி காவல் பிரிவுடன் NTUC Fairprice எடுத்த நடவடிக்கைகளில் முக்கியப் பங்கு வகித்ததற்காக விருது பெற்றார்.

ஆதாரம் : Mediacorp Seithi

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்