Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கிருமிப்பரவல் சூழலிலும் பொதுப் போக்குவரத்து பாதுகாப்பானதாக இருக்கலாம்... பயணிகள் முகக்கவசத்தை அணிந்து பேசாமல் இருந்தால்!

பொதுப் பேருந்து, ரயில்களில் பயணம் செய்வோர் எப்போதும் முகக்கவசம் அணிந்துகொண்டு பேசாமல் இருந்தால், பொதுப்போக்குவரத்து மிகவும் பாதுகாப்பானதே என்று போக்குவரத்து அமைச்சர் ஓங் யீ காங் கூறியிருக்கிறார்.

வாசிப்புநேரம் -
கிருமிப்பரவல் சூழலிலும் பொதுப் போக்குவரத்து பாதுகாப்பானதாக இருக்கலாம்... பயணிகள் முகக்கவசத்தை அணிந்து பேசாமல் இருந்தால்!

(படம்: Catherine LAI/AFP)

பொதுப் பேருந்து, ரயில்களில் பயணம் செய்வோர் எப்போதும் முகக்கவசம் அணிந்துகொண்டு பேசாமல் இருந்தால், பொதுப்போக்குவரத்து மிகவும் பாதுகாப்பானதே என்று போக்குவரத்து அமைச்சர் ஓங் யீ காங் கூறியிருக்கிறார்.

அமைச்சுகளுக்கிடையிலான பணிக்குழுவின் செய்தியாளர் கூட்டத்தில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு, அவர் அவ்வாறு பதிலளித்தார்.

பேருந்து, ரயில்களில் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் உத்தேச நடவடிக்கைகள் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது.

பெருவிரைவுப் போக்குவரத்து ரயில்களில் காற்றுச் சுழற்சி சிறப்பாக உள்ளதென்று அவர் உறுதிகூறினார்.

ரயில் கதவுகள் திறந்து மூடுவது தவிர்த்து, ஆறு நிமிடங்களுக்கு ஒருமுறை உள்ளிருக்கும் காற்று உறிஞ்சப்பட்டுப் புதுக்காற்று செலுத்தப்படுவதாக அவர் சொன்னார்.

ரயில்களில் நிலவும் கூட்டத்தை நிலப் போக்குவரத்து ஆணையம் தொடர்ந்து கண்காணித்துவருகிறது.

குறிப்பிட்ட நிலையங்களில், குறிப்பிட்ட நேரத்தில் கூட்டம் கூடுவதும் கவனத்தில் கொள்ளப்படுகிறது.

அங்கிருந்து புறப்படும் ரயில், அடுத்த நிலையத்துக்குச் சென்றதும் அந்தக் கூட்டம் குறைவதாகத் தெரிவிக்கப்பட்டது.

மக்கள் தொடர்ந்து கட்டுப்பாட்டுடன் செயல்பட்டு விதிமுறைகளைப் பின்பற்றினால், பொதுபோக்குவரத்து வாகனங்களை, தொடர்ந்து பாதுகாப்பாக வைத்திருக்க முடியும் என்று அமைச்சர் ஓங் நம்பிக்கை தெரிவித்தார்.   

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்