தகுதிபெறும் குடும்பங்களுக்கு $60 போக்குவரத்துப் பற்றுச்சீட்டு
This audio is generated by an AI tool.
தகுதிபெறும் குடும்பங்கள் நாளை முதல் (20 ஜனவரி) 60 வெள்ளி மதிப்பிலான போக்குவரத்துப் பற்றுச்சீட்டுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
குறைந்த வருமானக் குடும்பங்கள், ஆண்டு முழுவதும் போக்குவரத்துச் செலவைச் சமாளிக்கப் பற்றுச்சீட்டுகள் உதவும் என்று போக்குவரத்துக்கான மூத்த துணையமைச்சர் முரளி பிள்ளை (Murali Pillai) தெரிவித்தார்.
தகுதி பெறும் குடும்பங்களின் மாத வருமானம் ஒருவருக்கு 1,800 வெள்ளிக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
2025 PTV எனும் அந்தத் திட்டம் இரண்டு கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்படுகிறது.
முதற்கட்டம் சென்ற ஆண்டு (2025) டிசம்பரில் நடப்புக்கு வந்தது.
பற்றுச்சீட்டுகளைப் பெற்ற சுமார் 300,000 குடும்பங்ககுக்கு அறிவிப்புக் கடிதங்கள் அனுப்பப்பட்டன.
2ஆவது கட்டம் நாளை தொடங்கி அக்டோபர் 31 வரை நடப்பில் இருக்கும்.
தகுதியிருந்தும் முதற்கட்டத்தில் பற்றுச்சீட்டுக் கிடைக்கப்பெறாத குடும்பங்கள் இணையம் அல்லது சமூக நிலையங்களுக்குச் சென்று விண்ணப்பிக்கலாம்.
2027 மார்ச் 31ஆம் தேதிவரை பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்தலாம்.