Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பொதுப்போக்குவரத்தில் 7 விழுக்காட்டுக் கட்டண உயர்வு அதிகமில்லை: நிபுணர்கள்

வாசிப்புநேரம் -
பொதுப்போக்குவரத்தில் 7 விழுக்காட்டுக் கட்டண உயர்வு அதிகமில்லை: நிபுணர்கள்

(படம்: Joey Liew)

நடைமுறைச் செலவினம் அதிகரித்திருப்பதன் பின்னணியில் பொதுப்போக்குவரத்துக் கட்டண உயர்வைக் கருத்தில் கொள்ளவேண்டும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

பொதுப் போக்குவரத்து மன்றத்தின் அண்மைய கட்டண மறுஆய்வைத் தொடர்ந்து அவர்கள் அவ்வாறு தெரிவித்தனர்.

செலவின நெருக்கடி உள்ளிட்ட பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டி பொதுப் போக்குவரத்துக் கட்டணத்தை சுமார் 22.5 விழுக்காடு உயர்த்த SBS, SMRT நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்தன.

ஆனால் ஒட்டுமொத்தமாக 7 விழுக்காட்டுக் கட்டண உயர்வுக்கு பொதுப் போக்குவரத்து மன்றம் அனுமதி வழங்கியது. எஞ்சிய சுமார் 15.5 விழுக்காட்டுக் கட்டண உயர்வு வரும் ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்படுகிறது.

செலவினங்கள் அதிகரித்து வரும் சூழலில் 7 விழுக்காட்டுக் கட்டண உயர்வு அதிகமில்லை என்று சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத் துணைப் பேராசிரியர் டெரன்ஸ் பான் (Terence Fan) கூறினார்.

ஆனால் முந்திய ஆண்டுகளை ஒப்புநோக்க கட்டண உயர்வு அதிர்ச்சி தரக்கூடிய முடிவாக இருக்கலாம் என்றார் அவர்.

வழக்கமாகப் பொதுப் போக்குவரத்துக் கட்டண உயர்வு 5 விழுக்காட்டுக்கும் குறைவாகவே இருக்கும். சென்ற ஆண்டு 2.9 விழுக்காடு கட்டணம் உயர்த்தப்பட்டது.
ஆதாரம் : CNA/an(sn)

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்