Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் மாதந்தோறும் முதலாம் தேதியன்று நண்பகல் 12 மணிக்குக் கேட்கும் மணியொலி... எங்கிருந்து வருகிறது, எதனால் ஒலிக்கிறது?

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் மாதந்தோறும் முதலாம் தேதியன்று நண்பகல் 12 மணிக்குக் கேட்கும் மணியொலி... எங்கிருந்து வருகிறது, எதனால் ஒலிக்கிறது?

(படம்: Wikimedia Commons / Telegraphia)

சிங்கப்பூரில் ஒவ்வொரு மாதமும் முதலாம் தேதியன்று சரியாக நண்பகல் 12 மணிக்கு ஒருவித மணியொலி கேட்கும்... கவனித்திருக்கிறீர்களா?

அது எங்கிருந்து வருகிறது? எதனால் ஒலிக்கிறது? 'செய்தி'-இடம் சிலர் கேட்டீர்கள்... பதிலைக் கண்டறிந்து தொகுத்துள்ளோம்.

Public Warning System (PWS) - அபாய ஒலிக் கட்டமைப்பு

குடிமைத் தற்காப்புப்படை அபாய ஒலியை எழுப்பும் சாதனங்களை சிங்கப்பூரின் பல இடங்களில் பொருத்தியுள்ளது.

படையெடுப்பு, குண்டுவெடிப்பு உள்ளிட்ட அபாயச் சூழ்நிலைகள் குறித்து மக்களுக்குத் தெரிவிக்க அந்தச் சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

சாதனங்கள் எங்கு இருக்கின்றன?

🔊பொதுவாகக் கட்டடங்களின் கூரைகளில்

🔊சில இடங்களில் தரையில் பொருத்தப்பட்டுள்ளன


ஏன் மாதந்தோறும் முதலாம் தேதியன்று நண்பகல் 12 மணிக்கு ஒலிக்கிறது?

ஒலிச் சாதனங்கள் சரிவர இயங்குகின்றனவா என்பதைச் சோதிக்க மாதத்தின் முதல் நாளன்று சரியாக நண்பகலில் மணியொலி கேட்கிறது.

வேறு எப்போது அபாய ஒலிக் கட்டமைப்பு பயன்படுத்தப்படும்?

🔊முழுமைத் தற்காப்பு நாளன்று (15 பிப்ரவரி)

🔊முக்கியமானவர்கள் காலமாகும்போது ஒருநிமிட மௌன அஞ்சலி செலுத்துவதற்கு முன்னர்

🔊நாடு தாக்கப்படும்போது


ஆதாரம்: சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்