Skip to main content
பொங்கோல் கோஸ்ட் ரயில் நிலையத்தில் முக அடையாள வாயில்கள் சோதனை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

பொங்கோல் கோஸ்ட் ரயில் நிலையத்தில் முக அடையாள வாயில்கள் சோதனை

வாசிப்புநேரம் -
பொங்கோல் கோஸ்ட் ரயில் நிலையத்தில் முக அடையாள வாயில்கள் சோதனை

(படம்: CNA/Fabian Koh)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

நிலப்போக்குவரத்து ஆணையம், பொங்கோல் கோஸ்ட் ரயில் நிலையத்தில் முக அடையாள வாயில்களைச் சோதனை செய்வதாகத் தெரிவித்திருக்கிறது.

பொதுச் சேவை அதிகாரிகளிடம் மட்டும் அந்தச் சோதனை நடத்தப்படுவதாக ஆணையம் கூறியது.

கட்டணம் செலுத்தும் முறையின் தொடர்பில் நவீன வாயில்கள் உள்ளன.

பங்கேற்பாளர்களின் முக அடையாளம் அவர்களின் SimplyGo அட்டையுடன் இணைக்கப்பட்டிருப்பதாக ஆணையம் சொன்னது.

அந்த அட்டைகளைக் கொண்டு அவர்கள் பொங்கோல் கோஸ்ட் ரயில் நிலையத்திற்குள் நுழையலாம், வெளியேறலாம் என்று அது குறிப்பிட்டது.

ஆரம்பகட்டச் சோதனை என்பதால் திட்டத்தை விரிவுபடுத்த தற்போது எண்ணம் ஏதும் இல்லை என்று ஆணையம் சொன்னது.

பொங்கோல் கோஸ்ட் ரயில் நிலையத்தில் இரு வாயில்களில் திரை அமைக்கப்பட்டுள்ளன என்று CNA தெரிவித்தது.

அவை சுமார் ஒரு வாரத்திற்கு முன்பு அமைக்கப்பட்டதாக நிலைய ஊழியர்கள் கூறினர்.
ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்