பொங்கோலில் புதிய சாதனை படைத்த மறுவிற்பனை வீடு...1.22 மில்லியன் வெள்ளிக்கு விற்பனை

(கோப்புப் படம்: வீடமைப்பு வளர்ச்சிக் கழகம்)
பொங்கோல் வட்டாரத்தில் ஐந்தறை மறுவிற்பனை வீடு ஆக அதிகமாக 1.22 மில்லியன் வெள்ளிக்கு விற்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அந்த வட்டாரத்தில் மறுவிற்பனை வீட்டின் விலை முதல்முறையாக ஒரு மில்லியன் வெள்ளியைத் தாண்டியது.
வீடு அப்போது 1.198 மில்லியன் வெள்ளிக்கு விற்பனையானது.
பொங்கோல் ஃபீல்டில் (Punggol Field) Punngol Sapphire வீடமைப்பில் உள்ள வீடு ஆகஸ்ட் மாதம் விற்பனைக்கு வந்தது.
அதை விசாரித்த 100க்கும் அதிகமானோரில் சிலர் 1.1 மில்லியன் வெள்ளி முதல் 1.24 மில்லியன் வெள்ளி வரை கூட அளிக்க முன்வந்ததாக 8World சொன்னது.
-8World