சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
வரலாற்றைப் படைக்கும் வாய்ப்பு பொங்கோல் குடியிருப்பாளர்களின் கையில் உள்ளது: பாட்டாளிக் கட்சி

CNA/Syamil Sapari
வரலாற்றைப் படைக்கும் வாய்ப்பு பொங்கோல் குடியிருப்பாளர்களின் கையில் உள்ளது என்று அத்தொகுதியில் நிற்கும் திரு ஹர்பிரீட் சிங் தெரிவித்துள்ளார்.
1991ஆம் ஆண்டு ஹவ்காங் தனித்தொகுதியைப் பாட்டாளிக் கட்சி வென்று வரலாறு படைத்தது. இன்று வரை அந்தத் தனித்தொகுதி பாட்டாளிக் கட்சி வசம் உள்ளது.
"பொங்கோல் குடியிருப்பாளர்களுக்கு நேரம் வந்துவிட்டது. உங்களை யார் பிரதிநிதிக்க போகிறார்கள் என்பதை முடிவெடுக்கப்போகிறீர்கள். ஆயிரக்கணக்கான சிங்கப்பூரர்களின் எதிர்பார்ப்புகளை சுமந்திருக்கிறீர்கள். வெளிப்படையான சிங்கப்பூரை உருவாக்கினால், சாதாரண குடிமக்களும் முன்வந்து பேசுவர். இந்தப் பொன்னான வாய்ப்பை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்," என்றார் திரு ஹர்பிரீட் சிங்.
மே தின உரையில் பிரதமர் லாரன்ஸ் வோங் அமைச்சரவைக் குழுவைக் காற்பந்துக் குழுவுடன் ஒப்பிட்டுப் பேசினார்.
மாற்று விளையாட்டாளர்கள் இருந்தாலும்கூட முக்கியமான விளையாட்டாளர்களை இழந்தால் குழு பாதிப்படையும் என்றார் அவர்.
அதற்குப் பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளர் திரு பிரித்தம் சிங் பதிலளித்தார்.
11 விளையாட்டாளர்கள் அடங்கிய காற்பந்துக் குழு போதாது என்றார் அவர். ஒவ்வொரு விளையாட்டாளரும் முக்கியம். மாற்று விளையாட்டாளர்களின் பங்கு மிக அவசியம் என்று அவர் வலியுறுத்தினார். மக்கள் செயல் கட்சியில் திறமைசாலிகள் பலர் உள்ளனர். அவர்கள் தொடர்ந்து சிங்கப்பூரர்களைப் பார்த்துக்கொள்வர்.ஆனால் பொறுப்புள்ள, ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சி முக்கியம் என்றார் திரு பிரித்தம் சிங்.