Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

குறைவான உணவு, நல்ல உடற்பயிற்சி...ஆனாலும் வயிற்றுப் பகுதியில் கொழுப்பு - காரணம்?

வாசிப்புநேரம் -
குறைவான உணவு, நல்ல உடற்பயிற்சி...ஆனாலும் வயிற்றுப் பகுதியில் கொழுப்பு - காரணம்?

Envanto Elements

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

பெண்கள் வயதாகும்போது உடல் எடை அதிகரிப்பது வழக்கம்.

குறிப்பாக, மாதவிடாய் நிற்கும் காலத்தில் வயிற்றுப் பகுதியில் கொழுப்பு அதிகமாகச் சேரலாம்.

குறைவாகச் சாப்பிட்டு, அதிகமாக உடற்பயிற்சி செய்தாலும் அதைக் குறைப்பது சிரமமாக இருக்கலாம்.

பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜன் (Oestrogen) ஹார்மோன் (Hormone) குறைவது அதற்கு முக்கியக் காரணம்.

வயிற்றில் சேரும் கொழுப்பு உடல் தோற்றத்தை மட்டுமல்ல, ஆரோக்கியத்தையும் பாதிக்கலாம் என்று CNAவிடம் பேசிய மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அந்தக் காலக்கட்டத்தில் பெண்களின் எடை சராசரியாக 2 முதல் 3 கிலோகிராம் வரை அதிகரிக்கலாம்.

வயதாகும்போது தசைகளும் குறைகின்றன. அதனால் உடல் எரிக்கும் கலோரிகளின் அளவு குறைகிறது.

தூக்கமின்மையும் உடல் எடை அதிகரிக்கக் காரணமாகலாம்.

ஆசியப் பெண்கள் மெலிந்த தோற்றத்துடன் இருந்தாலும், அவர்களின் உள்ளுறுப்புகளைச் சுற்றிக் கொழுப்பு அதிகமாகச் சேர வாய்ப்புள்ளது.

சிங்கப்பூரில் 1,200 பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்விலும் இதற்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டன.

இத்தகைய கொழுப்பு அதிகரிப்பதால் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், இதய நோய் ஆகியவற்றின் அபாயம் அதிகரிக்கலாம்.

அதைக் கட்டுப்படுத்த என்ன செய்யலாம்? CNA ஆராய்ந்தது. 

வாரத்திற்கு 2 அல்லது 3 முறை தசைகளை வலுப்படுத்தும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ள மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

உணவுக்குப் பிறகு 10 முதல் 15 நிமிடங்கள் நடப்பதும் ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும்.

முழுத் தானியங்கள், புரதச்சத்து நிறைந்த உணவுகள், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றைச் சாப்பிடவும் அறிவுறுத்தப்படுகிறது.

வயிற்றுக் கொழுப்பைக் குறைப்பதோடு தசைகளின் வலிமையைப் பாதுகாப்பதும் ஆரோக்கியமாக முதுமையடைய முக்கியம் என்று மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.

 

ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்