Skip to main content
கழக வீட்டுச் சன்னலைத் தட்டிய மலைப்பாம்பு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கழக வீட்டுச் சன்னலைத் தட்டிய மலைப்பாம்பு

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் ஜூரோங் வெஸ்ட்டில் இருக்கும் வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக்கின் இரண்டாம் தளத்துக்குச் சென்ற மலைப்பாம்பு அதன் தலையைச் சன்னலில் இடித்தது.

ஜூரோங் வெஸ்ட் ஸ்ட்ரீட் 92இல் இருக்கும் புளோக் 925இல் சென்ற ஞாயிற்றுக்கிழமை (8 டிசம்பர்) முற்பகல் 11 மணியளவில் சம்பவம் நடந்தது.

வீட்டின் வரவேற்பு அறையில் தூங்கிக்கொண்டிருந்தபோது, மின்தூக்கியிலிருந்து வெளியேறிய இருவர், பாம்பு இருக்கிறது எனச் சத்தமாய் எச்சரித்ததாக வீட்டு உரிமையாளர் திரு முக்லிஸ் சாவிட் (Muklis Sawit) 'ஒளிவழி 8' செய்தியிடம் கூறினார்.

உடனடியாக வீட்டுக் கதவையும் சன்னல்களையும் மூடியதாகத் திரு சாவிட் கூறினார்.

வீட்டின் பெரிய படுக்கையறையின் சன்னலைப் பாம்பு தட்டிக்கொண்டிருந்ததை அவர் கவனித்தார்.

உடனடியாக விலங்குவதைத் தடுப்புச் சங்கத்தின் உதவியை அவர் நாடினார்.

ராணுவத்தில் இருந்தபோது அத்தகைய சம்பவங்களை எதிர்நோக்கியுள்ளதால் தமக்குப் பயம் ஏற்படவில்லை என்றும் அவர் சொன்னார்.

மலைப்பாம்பைக் கண்ட பலர் புளோக்கின் வெற்றுத்தளத்தில் கூடினர்.

விலங்குப் பராமரிப்பு, ஆய்வுச் சங்கம் (ACRES) பாம்பைக் கைப்பற்ற அதிகாரிகளை அனுப்பியது.

மலைப்பாம்பை விடுவிப்பதற்கு முன்னர் அதற்குள் சில்லு பொருத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

வீடுகளில் விலங்குகள் புகுந்தால் உடனடியாக ACRES அல்லது தேசியப் பூங்காக் கழகத்தைத் தொடர்புகொள்ளுமாறு பொதுமக்களுக்கு ஆலோசனை தரப்பட்டது.
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்