துவாஸ், உட்லண்ட்ஸில் பேருந்தில் வருவோர் QR குறியீட்டைப் பயன்படுத்தலாம்
வாசிப்புநேரம் -
(படங்கள்: Facebook/ICA)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச் சாவடிகளைப் பேருந்துகளில் கடந்துசெல்வோர் இனி QR குறியீட்டைப் பயன்படுத்தலாம்.
அந்தச் சோதனை முயற்சி நாளை மறுநாள் தொடங்குவதாகக் குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் கூறியது.
துவாஸில் அது நாளை மறுநாள் (23 நவம்பர்) தொடங்குகிறது.
உட்லண்ட்ஸில் வரும் 28ஆம் தேதி தொடங்குகிறது.
சிங்கப்பூரர்கள், சிங்கப்பூர் நிரந்தரவாசிகள், நீண்ட கால அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள் உள்ளிட்டோர் அதனைப் பயன்படுத்தலாம் என்றது சிங்கப்பூர்க் குடிநுழைவு, சோதனைச்சாவடிகள் ஆணையம்.
இரண்டு சுங்கச் சாவடிகளிலும் குறிப்பிட்ட சில தடங்களில் QR குறியீட்டைப் பயன்படுத்தும் முறை சோதிக்கப்படும்.
அந்தத் தடங்களில் அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டிருக்கும். ஆணையத்தின் அதிகாரிகளும் உதவிக்கு இருப்பர்.
QR குறியீடுகளைக் குழுவாகவோ தனிநபராகவோ பயன்படுத்தலாம்.
QR குறியீட்டைப் பயன்படுத்தும் வழிமுறைகளைக் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆணையத்தின் Facebook பதிவில் காணலாம்.

ஆதாரம் : Others