Skip to main content
புதிய QR குறியீட்டைப் பயன்படுத்தப் பழகிக்கொள்ளுங்கள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

புதிய QR குறியீட்டைப் பயன்படுத்தப் பழகிக்கொள்ளுங்கள் - பயணிகளை அறிவுறுத்தும் ICA

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரின் நிலச் சோதனைச் சாவடிகளைக் கடக்கும் பலர் இன்னமும் புதிய QR குறியீட்டைப் பயன்படுத்தாமல் கடப்பிதழைச் சார்ந்திருப்பதாகக் குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

QR குறியீட்டு முறை உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச் சாவடிகளில் நடப்பில் உள்ளது.

பேருந்துப் பயணிகளில் சுமார் 50 விழுக்காடினரும் மோட்டார் சைக்கிளோட்டிகளில் 40 விழுக்காடினரும் மட்டுமே அதனைப் பயன்படுத்துகின்றனர்.

கார் ஓட்டுநர்கள், லாரி ஓட்டுநர்கள் இடையே அந்தப் போக்கு சற்று அதிகம்.

கார் ஓட்டுநர்களில் 69 விழுக்காட்டினர் அதனைப் பயன்படுத்துகின்றனர்.

லாரி ஓட்டுநர்களில் 85 விழுக்காடு.

மூத்தவர்களில் குறிப்பாக 51 வயதுக்கு மேற்பட்டவர்களில் பாதிப் பேர் மட்டுமே QR குறீயீட்டைப் பயன்படுத்த முனைகின்றனர்.

QR குறியீட்டுத் தானியக்க முறை அடுத்த ஆண்டு முழுமையாக நடப்புக்கு வரும். அதற்குள் அதனைப் பயன்படுத்திப் பழகிக்கொள்ளுமாறு ஆணையம் ஊக்குவிக்கிறது.
ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்