உலகின் 20 ஆகச்சிறப்பான பல்கலைக்கழகப் பட்டியலில் NUS, NTU
வாசிப்புநேரம் -
கோப்புப் படம்: CNA/Calvin Oh
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
ஆசியாவின் முன்னணி உயர்கல்வி முறையில் சிங்கப்பூர் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.
QS உலகப் பல்கலைக்கழகத் தரவரிசையில் சிங்கப்பூரின் இரண்டு பல்கலைக்கழகங்கள் உலகின் முதல் 20 நிலைக்குள் இடம்பெற்றுள்ளன.
வேலைவாய்ப்பு, ஆய்வுத் தாக்கம், அனைத்துலகமயம் போன்ற துறைகளில் அந்தப் பல்கலைக்கழகங்கள் சிறப்பாகச் செயல்படுகின்றன.
சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத்துக்கு இம்முறை இரண்டு இடங்கள் பின்னடைவு.
இருப்பினும் உலகத் தரவரிசையில் 10-ஆம் இடத்தைப் பிடித்து ஆசிய வட்டாரத்தில் முதலிடத்தில் உள்ளது.
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் 12-ஆவது இடத்தில் தொடர்கிறது.
ஆசியாவைப் பொறுத்தவரை நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் மூன்றாம் இடத்தில் தொடர்கிறது.
SUTD எனும் சிங்கப்பூர்த் தொழில்நுட்ப, வடிவமைப்புப் பல்கலைக்கழகம் 200க்கும் மேற்பட்ட இடங்கள் முன்னேறி 266ஆம் இடத்தைப் பிடித்துள்ளது.
சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம் 100 இடங்கள் முன்னேறி 411-ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.
அதன்மூலம் தரவரிசையில் உள்ள சிங்கப்பூரின் நான்கு பல்கலைக்கழகங்களும் உலகின் முதல் 500 இடங்களில் வந்துள்ளன.

ஆதாரம் : Mediacorp Seithi