"குர்பான் ஏற்பாடுகள் இனி முன்கூட்டியே தொடங்கும்"
வாசிப்புநேரம் -
(படம்: Masjid Al Islah Punggol)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம், குர்பான் சடங்கிற்கான ஏற்பாடுகளை இனி முன்கூட்டியே தொடங்கும் என்று முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சர் ஸாக்கி முகமது (Zaqy Mohamad) கூறியிருக்கிறார்.
ஹஜ்ஜுப் பெருநாளுக்கு 6 முதல் 8 மாதங்களுக்கு முன்பே பள்ளிவாசல்களோடும் குர்பான் சடங்கு நடத்துவோருடனும் பேச்சு தொடங்கப்படும் என்றார் அவர்.
வெளிநாட்டுக் கட்டுப்பாட்டு அனுமதிகளைப் பெறவும் செயல்முறையைத் திட்டமிடவும் அதனால் கூடுதல் அவகாசம் கிடைக்கும் என்று திரு ஸாக்கி கூறினார்.
இந்த ஆண்டு குர்பான் சடங்கிற்கான 400 பிராணிகள் தாமதமாக வந்துசேர்ந்தது பற்றிய கேள்விக்குத் திரு ஸாக்கி அவ்வாறு பதிலளித்தார்.
அதனால் 4 பள்ளிகளில் குர்பான் சேவைகள் பாதிக்கப்பட்டன.
உள்ளூர் குர்பான் நிர்வாகி, ஆஸ்திரேலிய அதிகாரிகளிடமிருந்து உரிய நேரத்தில் அனுமதி பெற முடியாததால் அந்தத் தாமதம் ஏற்பட்டது.

ஆதாரம் : Mediacorp Seithi