Skip to main content
"வெவ்வேறு பின்னணியுள்ளோருடன் பழகுவது முக்கியம்"
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

"வெவ்வேறு பின்னணியுள்ளோருடன் பழகுவது முக்கியம்" - இளையர்களின் ஒருமித்த கருத்து

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் அமைதி, நல்லிணக்கத்தைக் கட்டிக்காப்பதில் இளையர்களின் பங்கு குறித்துக் கலந்துரையாட ‘The Radical Shift’ எனும் கருத்தரங்கு நடத்தப்பட்டது.

இன, சமய நல்லிணக்கக் குழுக்களின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட கருத்தரங்கில் 150க்கும் அதிகமான இளையர்கள் கலந்துகொண்டனர்.

கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சு நிகழ்ச்சிக்கு ஆதரவளித்தது.

கலாசார, சமூக, இளையர், வர்த்தக, தொழில் துணையமைச்சர் ஆல்வின் டான் (Alvin Tan) நிகழ்ச்சியில் பேசினார்.

பயங்கரவாத நடவடிக்கைகளின் தாக்கத்தில் இருந்து சிங்கப்பூரைப் பாதுகாக்க இளையர்களும் பங்காற்றலாம் என்று திரு டான் சொன்னார்.

விழிப்புடன் இருப்பது அவசியம் என்றும் அமைதி, நல்லிணக்கம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்த தாங்கள் முன்மாதிரிகளாக இருக்கவேண்டும் என்றும் இளையர்கள் தெரிவித்தனர்.

கருத்தரங்கில் கலந்துகொண்ட இளையர்கள் சிலரின் கருத்துகள்...

"வெவ்வேறு பின்னணிகளைச் சேர்ந்தவர்களுடன் பழகுவது முக்கியம். அவ்வாறு செய்யும்போது வேறுபட்ட கருத்துகளைப் புரிந்துகொள்ளலாம். அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயத்தை உருவாக்கலாம்"

"குறுகிய கண்ணோட்டம், இனவாதம், பாகுபாடு, தீவிரவாதம் ஆகியவற்றை எதிர்த்து நிற்பதில் இளையர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். இணையத்தில் பலதரப்பட்ட செய்திகள் பகிரப்படுகின்றன. இணையத்தில் கருத்துத் தெரிவிப்பதற்கு முன் நன்கு யோசிக்க வேண்டும்.
கருத்துகள் பிறருக்கு வருத்தமளிக்கும் வகையில் இல்லாமல் இருப்பதைப் பார்த்துக்கொள்வது முக்கியம்"
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்