துவாஸ் சோதனைச் சாவடியில் விபத்து
படம்: Facebook/柔新关卡Both Checkpoint 分享站
துவாஸ் சோதனைச் சாவடியில் மலேசியா நோக்கிச் செல்லும் பாதையில் விபத்து ஏற்பட்டதாக 8 World ஊடகம் சொன்னது.
அதனால் மலேசியாவுக்குச் செல்வோர் தங்கள் பயணத்தில் தாமதத்தை எதிர்நோக்கலாம் என்று குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் Facebookஇல் நேற்றிரவு பதிவிட்டது.
அந்த விபத்தின் சில காணொளிகளும் படங்களும் இணையத்தில் பகிரப்பட்டுவருகின்றன.
விபத்து இரவு 8.30 மணியளவில் நடந்ததாகக் கூறப்படுகிறது.
விபத்தில் இருவர் மாண்டதாகச் சம்பவத்தை நேரில் பார்த்த சிலர் கூறியுள்ளனர்.
எனினும் மாண்டோர் குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.
அவர்கள் கணவன் - மனைவி என்று நம்பப்படுகிறது.
விபத்து நடந்த இடம் சுத்தம் செய்யப்பட்டு விட்டதாக இரவு 10.40 மணி வாக்கில் ஆணையம் சொன்னது.
அனைத்துப் பாதைகளும் மீண்டும் போக்குவரத்துக்குத் திறந்துவிடப்பட்டுள்ளதாக அது கூறியது.
அதனால் மலேசியாவுக்குச் செல்வோர் பயணத் தாமதத்தை எதிர்நோக்கலாம் என்று குடிநுழைவுச் சோதனைச் சாவடிகள் ஆணையம் Facebookஇல் நேற்றிரவு பதிவிட்டது.
அந்த விபத்தில் எடுக்கப்பட்டதாக நம்பப்படும் சில காணொளிகளும் படங்களும் இணையத்தில் பகிரப்பட்டுவருகின்றன.
விபத்து இரவு 8.30 மணியளவில் நடந்ததாகக் கூறப்படுகிறது.
விபத்தில் இருவர் மாண்டதாக நேரில் பார்த்த சிலர் கூறியுள்ளனர்.
எனினும் அவர்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.
இரவு 10.40 மணியளவில் கிடைத்த தகவலில் விபத்து நடந்த இடத்தில் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டுவிட்டதாக ஆணையம் சொன்னது.
அனைத்துப் பாதைகளும் மீண்டும் போக்குவரத்துக்குத் திறந்துவிடப்பட்டு விட்டதாக அது கூறியது.