Skip to main content
உட்லண்ட்ஸ் சுங்கச் சாவடியில் கூட்ட நெரிசல்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

உட்லண்ட்ஸ் சுங்கச் சாவடியில் கூட்ட நெரிசல் - பயணத்துக்கு 140 நிமிடங்கள் வரை எடுக்கலாம்

வாசிப்புநேரம் -
உட்லண்ட்ஸ் சுங்கச் சாவடியில் இன்று காலை மோசமான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

பிற்பகல் நேரத்திலும் போக்குவரத்து நெரிசல் மோசமாக இருந்தது. மலேசியாவுக்குச் செல்ல 140 நிமிடங்கள் எடுக்கும் என்று கணக்கிடப்படுகிறது.

Checkpoint.sg செயலியில் பிற்பகல் 3.10 மணியளவில் உட்லண்ட்ஸ் சுங்கச் சாவடி வழியாகச் சிங்கப்பூரிலிருந்து மலேசியா செல்வதற்கு 90 நிமிடங்கள் முதல் 140 நிமிடங்கள் வரை எடுக்கும் என்று காட்டியது.

சென்ற சனிக்கிழமையைவிட (4 ஜனவரி) இன்று மலேசியாவுக்குச் செல்லக் கூட்டம் அதிகமாக இருந்ததாக Checkpoint.sg தரவுகள் குறிப்பிடுகின்றன.

சிங்கப்பூர் குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் போக்குவரத்து நெரிசல் குறித்து அதன் Facebook பக்கத்தில் பதிவிட்டது.

மலேசியாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக உட்லண்ட்ஸ் சுங்கச் சாவடியிலும் நெரிசல் ஏற்பட்டுள்ளதாக ஆணையம் தெரிவித்தது.

மக்கள் பயணம் செய்வதற்கு முன்னர் போக்குவரத்து நிலைமையைச் சரிபார்க்குமாறு அது கேட்டுக்கொண்டது.
 
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்