Skip to main content
'அறிவைக் கொண்டாடுவோம்' இயக்கம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

'அறிவைக் கொண்டாடுவோம்' இயக்கம்

வாசிப்புநேரம் -
சிங்கப்பூர் ஒரு சமூகமாகவும் நாடாகவும் அடுத்தக் கட்டத்திற்கு முன்னேறிச் செல்ல அரசாங்கத்தின் முயற்சிகள் மட்டும் போதாது என்று துணைப் பிரதமர் கான் கிம் யோங் (Gan Kim Yong) கூறியுள்ளார்.

ஒவ்வொரு சிங்கப்பூரரும் முன்னேறி வாழ்வில் வெற்றிபெற ஒட்டுமொத்த சமூகத்தின் முயற்சியும் அவசியம் என்று அவர் சொன்னார்.

மலாய் முஸ்லிம் சமூகம் வழிநடத்தும் 'அறிவைக் கொண்டாடுவோம்' இயக்கத்தைத் தொடங்கி வைத்துத் திரு கான் பேசினார்.

இன்றைய நிச்சயமற்ற சூழலை எதிர்கொள்ள சமூகத்தினரிடையே வலுவான ஒற்றுமை முக்கியம் என்று அவர் சொன்னார்.

நிகழ்ச்சியில் சுமார் 150 சமூகத்தலைவர்களும் இளையர்களும் கலந்துகொண்டனர்.

ஒரு மாத நிகழ்ச்சியில் மாநாடுகள், கருத்துரங்குகள் போன்றவை இடம்பெறும்.
 
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்