Skip to main content
சிங்கப்பூரின் புதிய வனவிலங்குப் பூங்கா Rainforest Wild Asia… திறந்தது
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

சிங்கப்பூரின் புதிய வனவிலங்குப் பூங்கா Rainforest Wild Asia… திறந்தது

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரின் புதிய வனவிலங்குப் பூங்கா Rainforest Wild Asia… திறந்தது

(படம்: கீர்த்திகா பெருமாள்)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சிங்கப்பூரின் புதிய வனவிலங்குப் பூங்கா, Rainforest Wild Asia அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டுள்ளது.

நாட்டின் ஐந்தாவது வனவிலங்குப் பூங்கா அது. தற்போது அதன் முதல்கட்டம் திறக்கப்பட்டுள்ளது. 

நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ (Grace Fu) பூங்காவைத் திறந்து வைத்தார்.

சாகச அடிப்படையில் கட்டப்பட்டுள்ள பூங்காவுக்குச் செல்ல மக்கள் காலையிலேயே திரண்டதாக 'செய்தி' நிருபர் கீர்த்திகா பெருமாள் சொன்னார்.

பூங்காவில் அருகிவரும் விலங்குகள் உட்பட 36 வகை விலங்குகள் உள்ளன.

அவற்றுள் புலி, கரடிகள், வனநாய்கள் போன்ற விலங்குகள் உள்ளன.

Related article image
(படம்: கீர்த்திகா பெருமாள்)

வருகையாளர்கள் சிங்கப்பூரில் இதுவரை காணாத அரிய பிரான்சுவா லங்குர் குரங்குகளையும் (Francois langur) பிலிப்பீன்ஸ் புள்ளிமான்களையும் (Philippine spotted deer) காணலாம். 

மழைக்காட்டு  அனுபவத்தை அளிக்கும் பூங்காவில் வருகையாளர்கள் நிலத்துக்கு அடியிலும் மரங்களின் உயரத்திலும் செல்லவேண்டியிருக்கும்.
 

Related article image
CNA
Related article image
CNA

மரங்களுக்கு இடையே செல்லும் விலங்குகளைக் கண்டுபிடிக்கும் ஆர்வத்தை அது ஏற்படுத்துவதாக நிருபர் கீர்த்திகா சொன்னார்.

"வருகையாளர்களைச் சுற்றி விலங்குகள் உலா வருகின்றன. எங்கு, எந்த விலங்கு உள்ளது என்று கண்டுபிடிப்பதில் அவர்கள் ஆர்வம் கொண்டுள்ளனர்," என்றார் அவர் .

Rainforest wildlife Asia தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.

கட்டணம்:
பெரியவர்கள் -$43
பிள்ளைகள் - $31
மூத்தோர் - $20

இம்மாத இறுதி வரை உள்ளூர்வாசிகளுக்கு 10 வெள்ளி  கழிவு உண்டு.

ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்