Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

50 வயதுக் குற்றவாளிக்குப் பிரம்படிக்கு பதில் கூடுதல் சிறைத்தண்டனை

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் பாலியல் வன்கொடுமை புரிந்த குற்றவாளி ஒருவருக்கு 13 பிரம்படிக்குப் பதிலாக 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கோ லீ ஹுவா (Koh Lee Hwa) என்ற அந்த ஆடவருக்கு 2025ஆம் ஆண்டு நவம்பர் மாதம், 12 ஆண்டுகள், மூன்று வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

அதோடு 13 பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.

பாலியல் வன்கொடுமை, கற்பழிப்பு ஆகிய குற்றங்களுக்காக அந்தத் தண்டனை விதிக்கப்பட்டது.

அவர் தண்டனையை எதிர்த்து பலமுறை மேல்முறையீடு செய்தார்.

அவற்றை நிராகரித்த நீதிமன்றம், பிரம்படிக்கு பதில் சிறைத்தண்டனையை அதிகரிக்க உத்தரவிட்டது.

கோவுக்கு ஜனவரியில் 50 வயதானது.

சிங்கப்பூரில் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குப் பிரம்படி விதிக்க முடியாது.

பாலியல் குற்றங்களுக்குப் பிரம்படி முக்கியமான தடுப்பு நடவடிக்கை என்றது நீதிமன்றம்.

குற்றவாளிகள் உடல்ரீதியாக வலியை அனுபவிப்பது பாதிக்கப்பட்டவர்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கிறது என்ற கருத்தையும் முன்வைத்தது.

பாதிக்கப்பட்டவர் 2021ஆம் ஆண்டில் தனது வீட்டில் புதுப்பிப்புப், பழுதுபார்ப்புப் பணிகளுக்காகக் கோவை வேலைக்கு அமர்த்தினார்.

கோ அந்த சமயத்தில் பாதிக்கப்பட்டவரை  அத்துமீறி நடந்துகொண்டார்; பலாத்காரம் செய்தார்.

ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்