Skip to main content
சொல்லிசைப் (Rap) பாடகர் சுபாஷ் நாயரின் மேல்முறையீடு நிராகரிப்பு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சொல்லிசைப் (Rap) பாடகர் சுபாஷ் நாயரின் மேல்முறையீடு நிராகரிப்பு

வாசிப்புநேரம் -
உள்ளூர் (Rap) சொல்லிசைப் பாடகர் சுபாஷ் நாயர் தமக்கு விதிக்கப்பட்ட
6 வாரச் சிறைத் தண்டனையை எதிர்த்து செய்த மேல்முறையீடு உயர் நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டுள்ளது.

அவருடைய சிறைத்தண்டனைக் காலம் இன்று தொடங்குகிறது.

2019ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்கும் 2021ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குமிடையே சீன, மலாய் சமூகத்தினர் பற்றி அவதூறான கருத்துகளைக் கூறியதற்காக 2023ஆம் ஆண்டில் அவர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

4 குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது.

கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏற்புடையதே என்று ஒப்புக்கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதி, சமூக ஊடகங்களில் பகிரப்படும் அவதூறான கருத்துகள் உலகளவில் பலரையும் காயப்படுத்தும் சாத்தியம் உள்ளது எனக் கூறினார்.

அத்தகைய பாதிப்புகளைத் தடுக்கக் கடுமையான தண்டனைகள் விதிப்பது அவசியம் என்று வலியுறுத்தினார்.

இன, சமயக் குழுக்களிடையே பகைமையைத் தூண்ட முயன்ற குற்றத்திற்காக நாயருக்கு அதிகபட்சம் 3 ஆண்டுச் சிறை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்பட்டிருக்கலாம்.
ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்