Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் எவ்வளவு பேருக்கு அரிய ரத்த வகை இருக்கிறது?

மலேசியாவில் அண்மையில் Rhnull என்ற ஆக அரிய வகை ரத்தம் கொண்ட ஒரு பெண் அடையாளம் காணப்பட்டார்.

வாசிப்புநேரம் -

மலேசியாவில் அண்மையில் Rhnull என்ற ஆக அரிய வகை ரத்தம் கொண்ட ஒரு பெண் அடையாளம் காணப்பட்டார்.

உலகில் 43 பேருக்கு மட்டுமே அந்த ரத்த வகை உண்டு.

அரிய ரத்த வகை என்றால் என்ன?

ரத்தத்தின் சிவப்பு உயிரணுக்களில் (Red Cells) ஆன்டிஜன் (Antigen) இல்லை என்றால் அது அரிய ரத்தமாக வகைப்படுத்தப்படுகிறது.

அது குறித்து மேல் விவரம் தெரிந்து கொள்ள சுகாதார அறிவியல் ஆணையத்தை அணுகியது 'செய்தி'.

கோப்புப் படம்: AFP

1,000 பேரில் ஒருவருக்குக் குறைவானவர்களிடம் மட்டுமே அத்தகைய ரத்த வகை இருக்கும் என ஆணையம் கூறியது.

Rhnull ரத்தத்தின் சிவப்பு உயிரணுக்களில் Rh ஆன்டிஜன் அறவே கிடையாது என்பதால் அது உலகின் ஆக அரிய ரத்த வகையாகக் கருதப்படுகிறது.

சுமார் 6 மில்லியன் பேரில் ஒருவருக்கு மட்டுமே அவ்வாறு இருக்கும்.

சிங்கப்பூரில் யாருக்காவது அரிய ரத்த வகை இருக்கிறதா?

இங்கு இதுவரை மூவருக்கு மற்றொரு அரிய ரத்த வகையான Bombay ரத்த வகை கண்டறியப்பட்டுள்ளது.

Bombay ரத்தத்தின் சிவப்பு உயிரணுக்களில் H ஆன்டிஜன் கிடையாது.

மக்கள்தொகையில் 0.0004 விழுக்காட்டினருக்கு மட்டுமே அது உள்ளது.

சிங்கப்பூரில் Rh(D) negative ரத்த வகையும் சற்று அரிது.

மக்கள்தொகையில் சுமார் 1.5 விழுக்காட்டினருக்கு மட்டுமே அது இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

அது இந்தியர்களிடமும் வெள்ளை இனத்தவர்களிடமும் அதிகம் கண்டறியப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் அரிய ரத்த வகைப் பதிவகம்

--2004ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

--அரிய ரத்த வகைகளைக் கொண்டோர் வெவ்வேறு வழிகளில் அடையாளம் காணப்படுகின்றனர்.

--அவர்கள் தானம் செய்யும் ரத்தம் உறைய வைக்கப்பட்டு, எதிர்காலப் பயன்பாட்டிற்காகப் பாதுகாக்கப்படுகிறது.

Rh(D) negative ரத்த வகை கொண்டவர்களும், மற்ற அரிய ரத்த வகைகளைக் கொண்டவர்களும் ஆண்டுக்கு இரு முறையாவது ரத்த தானம் செய்யுமாறு ஆணையம் கேட்டுக்கொண்டது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்