Skip to main content
சிங்கப்பூர் ரயிலில் ஓடிய எலி
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர் trending

சிங்கப்பூர் ரயிலில் ஓடிய எலி

வாசிப்புநேரம் -
சிங்கப்பூர் ரயிலில் ஓடிய எலி

படம்: Reddit/r/SingaporeRaw/Beaveric

வெளியீடு : 24 May 2026 12:22PM புதுப்பிப்பு : 24 May 2026 01:08PM

கிழக்கு-மேற்குத் தடத்தில் ரயிலில் ஓடிய எலியைப் பயணிகள் துரத்தியுள்ளனர்.

பயணிகள் இருவரின் செயலைக் காட்டும் காணொளி இணையத்தில் பகிரப்பட்டது.

காணொளியில் எலி அங்கும் இங்கும் ரயிலில் ஓடுவதைக் காணமுடிகிறது.

இருக்கைகளுக்கு அடியிலும் அது ஓடியது.

அது இருக்கைக்கு மேல் குதிக்கவும் முனைகிறது.

அதைக் கண்டு பயந்த பயணிகள் சிலர் கூச்சலிட்டனர்.

இருவர் உதவிக்கு விரைந்தனர்.

அவர்கள் எலியைக் கதவின் திசையை நோக்கித் துரத்திவிட்டனர். 

ரயில் நிலையம் வந்ததும் ரயிலின் கதவுகள் திறந்தன.

எலி ரயிலை விட்டு வெளியேறியது.

காணாளியைக் கண்ட இணையவாசிகள் வேடிக்கையாகக் கருத்துரைத்தனர்.

"மோசமான பொருளாதாரத்தில் எலிகளும் ரயிலில் பயணம் செய்கின்றனவா?" என்று சிலர் பதிவிட்டனர்.

அப்புறம் எலி எங்கே போனது என்பது தெரியவில்லை.

ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்