Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

இன ஒருங்கிணைப்புக் கொள்கையால் பாதிக்கப்படுவோருக்கு கழகத்தின் உதவி- மதிப்பீட்டுக்கு ஒத்த விலையாக இருந்தால் நல்ல கொள்கையாக அமையும்: சொத்து முகவர்

வாசிப்புநேரம் -

Ethnic Integration Policy எனும் இன ஒருங்கிணைப்புக் கொள்கையால் கழக வீட்டை விற்கச் சிரமப்படும் உரிமையாளர்கள், வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்திடம் அதனை விற்பதற்கு விண்ணப்பிக்கலாம் என்று அண்மையில் அறிவிக்கப்பட்டது.

அத்தகைய வீடுகளை கழகத்திடமே நியாயமான விலையில் விற்க இயலும் என்று அறிவிக்கப்பட்டது.

இருப்பினும், வீடுகளின் மதிப்பீட்டுக்கு ஒத்த விலையில் அவை மீண்டும் வாங்கிக்கொள்ளப்பட்டால் மட்டுமே புதிய கொள்கை பயனுள்ளதாக அமையும் என்று சொத்து முகவர்கள் கூறுகின்றனர்.
 

Ethnic Integration Policy எனும் இன ஒருங்கிணைப்புக் கொள்கை

ஒரு கழக புளோக்கில் அல்லது அக்கம்பக்கக் குடியிருப்புப் பேட்டையில் ஒரே இனக் குழுவைச் சேர்ந்தவர்களுக்கான வீடுகளுக்கு வரம்புகள் நிர்ணயிக்கப்படும். அந்த வரம்புகள் எட்டப்பட்டவுடன் பாதிக்கப்பட்ட இனக் குழுக்களுக்கு வீடுகள் விற்கப்படமாட்டா. 

சுருக்கமாகப் பார்க்க

அந்தக் கட்டுப்பாடு சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த உரிமையாளர்களுக்கு எப்போதும் பாதகமாக அமைந்துள்ளது என்று Singapore Realtors Inc நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி ராமா சொன்னார்.



"வீட்டை விற்பதற்கு அதிக நேரம்...அதை சந்தைப்படுத்துவதற்கு முகவர்களுக்கு அதிக சிரமம்..இறுதியில், உரிமையாளர்கள் (மற்ற இனங்களைச் சேர்ந்த உரிமையாளர்களுடன் ஒப்பிடுகையில்) குறைந்த விலையில் வீட்டை விற்கவேண்டிய நிலை ஏற்படும். கிட்டத்தட்ட 15 விழுக்காட்டிலிருந்து 20 விழுக்காடு வரை விலை குறையும்." என்றார் அவர்.

அத்தகையோருக்கு உதவ முனையும் வகையில், வீட்டைக் கழகத்திற்கு மீண்டும் விற்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டிருப்பது நல்ல முயற்சி என்றார் அவர்.

திட்டத்திற்கு தகுதி பெற்ற உரிமையாளர்களின் வீட்டிற்கு, கழகத்தால் நிர்ணயிக்கப்பட்ட சொத்து மதிப்பீட்டு நிபுணர் பணியமர்த்தப்படுவார்.

அவரது மதிப்பீட்டைக் கருத்தில்கொண்டு, வீட்டை மீண்டும் வாங்குவதற்கான நியாயமான விலையைக் கழகம் நிர்ணயிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இருப்பினும், நிபுணரின் மதிப்பீட்டுக்கு ஏற்ற விலை முன்வைக்கப்படவில்லை என்றால், சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த உரிமையாளர்கள் இழப்பைச் சந்திக்க நேரிடும்.

என்று திரு. ராமா சொன்னார்.

இந்நிலையில், வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தால் நிர்ணயிக்கப்படும் "நியாயமான விலை", முறையாக நியாயப்படுத்தப்படுவது அவசியம் என்று முகவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்