விவாகரத்து அதிகரிக்க என்ன காரணம்?
வாசிப்புநேரம் -
(படம்: Envato Elements)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
விவாகரத்து விகிதம் அதிகரிப்பதற்கான காரணங்கள் குறித்துச் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி (Masagos Zulkifli) விவரங்கள் கொடுத்திருக்கிறார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உறுப்பினர் விக்ரம் நாயர் எழுப்பிய கேள்விக்குத் திரு மசகோஸ் பதிலளித்தார்.
5 ஆண்டுகளிலிருந்து 10 ஆண்டுகள்வரை திருமணமான தம்பதிகளிடையே விவாகரத்து அதிகமாக இருப்பதைத் திரு நாயர் சுட்டினார்.
பிள்ளை வளர்ப்பு, கருத்தரிப்புச் சிக்கல்கள், வலுவிழக்கும் பிணைப்பு ஆகியவை விவாகரத்து விகிதம் அதிகரிப்பதற்கான காரணங்கள் என்று அமைச்சர் மசகோஸ் கூறினார்.
திருமணத்தின் ஆரம்ப ஆண்டுகளில் நடந்த சண்டை சச்சரவுகள் தீர்க்கப்படாவிட்டால் அவற்றால் ஏற்படும் தாக்கத்தாலும் திருமணங்கள் பாதிக்கப்படுவதாகத் திரு மசகோஸ் சொன்னார்.
திருமண பந்தத்தை வலுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கைகளை எடுப்பதாக அவர் வலியுறுத்தினார்.
மக்களைத் திருமண வாழ்க்கைக்கும் பிள்ளை வளர்ப்புக்கும் தயார் செய்யப் பாடங்கள் நடத்தப்படுவதைத் திரு மசகோஸ் குறிப்பிட்டார்.
சிக்கல்களை எதிர்நோக்கும் தம்பதிகள் Strengthening Families திட்டத்தின்கீழ் ஆலோசனை பெறலாம் என்று அமைச்சர் சொன்னார்.

ஆதாரம் : Mediacorp Seithi