"கண்கள் சிவந்து, உடல் நடுங்கும்" - Kpods மின் சிகரெட் பழக்கத்தின் அறிகுறிகள்
வாசிப்புநேரம் -
படம்: Envato Elements
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
சிங்கப்பூரில் இளையர்கள் மத்தியில் Kpods மின் சிகரெட் பயன்பாடு அதிகரித்துவருகிறது.
இந்த ஆண்டு ஒரு மாதத்தில் சுமார் 30 சம்பவங்கள் பதிவாகியிருப்பதாக We Care Community அமைப்பு கூறியுள்ளது.
12, 13 வயதே ஆகும் சில பிள்ளைகள் Kpods மின் சிகரெட் பழக்கத்துக்கு அடிமையாகியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் நிபுணர்கள் கூறும் முக்கிய காரணம்.....
வீட்டுச் சூழல்.
வீட்டிலிருக்கும் சிக்கல்களைச் சமாளிக்க சில இளையர்கள் இந்தப் பழக்கத்துக்கு அடிமையாவதாகக் கூறப்படுகிறது.
சில பிள்ளைகளுக்குப் பெற்றோரின் போதிய கவனம் கிடைப்பதில்லை.
இதனால் ஏற்படும் மன அழுத்தத்தைப் போக்க Kpods மின் சிகரெட்டைப் பயன்படுத்த சிலர் முனைகின்றனர்.
Kpods மின் சிகரெட் பழக்கம் இருப்பதற்கான அறிகுறிகள்?
1. மனநிலையில் மாற்றம் - பதற்றத்துடன் இருப்பர்; அடிக்கடி தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வர்.
2. பாட மதிப்பெண்களில் திடீர் வீழ்ச்சி.
3. பள்ளிக்கு அடிக்கடி மட்டம் போடுதல்.
4. கண்கள் சிவந்திருக்கும்; தொடர் இருமல். உடலில் நடுக்கம், சோர்வு தென்படும். வாந்தி எடுப்பர்.
இந்த அறிகுறிகளை முன்கூட்டியே அறிந்துகொள்வதன் வாயிலாக இளையர்களை அந்தப் பழக்கத்திலிருந்து உடனே மீட்டுக் கொண்டுவர முடியும்.

"Kpods மின் சிகரெட்டிலிருந்து வெளியேறுவது வெறும் புகையல்ல; உயிரைக் குடிக்கும் நஞ்சு என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்,"
என்கின்றனர் நிபுணர்கள்.
ஆதாரம் : Others