Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மழைக்காலத்தால் பாதிக்கப்படும் விளையாட்டு நிறுவனங்கள்

வாசிப்புநேரம் -
மழைக்காலம் தொடங்கிவிட்டது.

வெளிப்புற நடவடிக்கைகளை நடத்தும் நிறுவனங்களின் வியாபாரத்தை அது பெரிதும் பாதித்துள்ளது.

நிச்சயமற்ற வானிலையால் பலர் அவற்றில் ஈடுபடத் தயங்குகின்றனர்.

ஆர்க்கிட் கண்ட்ரி கிளப்பில் அண்மையில் திறக்கப்பட்டது Paintball விளையாட்டுக்காகவே உருவாக்கப்பட்ட மைதானம்.

இந்த இடத்தை முன்பதிவு செய்வோரின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளதாக ஆர்க்கிட் கண்ட்ரி கிளப் கூறியது.

உட்புற நடவடிக்கைகள் உண்டா என்றே அதிகமானோர் தங்களிடம் விசாரிப்பதாகவும் அது சொன்னது.

வெளிப்புற நடவடிக்கைகளை வேறு ஒரு நாளுக்கு ஒத்தி வைப்பதில் இன்னொரு சிக்கலும் உள்ளது.

குழுவினர் அனைவரையும் புதிய நாளுக்கு ஒப்புக்கொள்ளவைப்பது சுலபமல்ல.

அடுத்து ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் உள்ள Constant Wind Sea விளையாட்டு நிலையம்.

நிச்சயமற்ற வானிலையால் இங்கு நடத்தப்படும் பயிற்சிகளில் சேர்வோரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது.

கடல் விளையாட்டுகளுக்கான கருவிகளை வாடகைக்கு எடுப்போரின் எண்ணிக்கை சென்ற மாதத்தில் 90 விழுக்காடு வரை குறைந்துள்ளதாக நிலையம் கூறியது.
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்