Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

விட்டு விட்டு வரும் காய்ச்சல்... விடாமல் வருவது ஏன்?

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் சிலருக்கு COVID-19 அல்லாத காய்ச்சல் வருவது குறித்துக் கேள்விப்படுகிறோம். 

அதிலும் அண்மையில் பலருக்குக் காய்ச்சல் விட்டு விட்டு வருவதாகத் தெரிகிறது. 

அது குறித்து மருத்துவரிடம் கேட்டு விவரமறிந்தது 'செய்தி'

விட்டு விட்டு வரும் காய்ச்சல் என்றால் என்ன?

குறிப்பிட்ட காலத்திற்குக் காய்ச்சல் வந்து வந்து போகும்.  

அதற்கும் சாதாரணமாக வரும் காய்ச்சலுக்கும் உள்ள வித்தியாசம்? 

விட்டு விட்டு வரும் காய்ச்சல் சிறிது நாள்களுக்கு வந்து பின் சரியாகிவிடும். நலமான பின்பு, மறுபடியும் காய்ச்சல் வரும். 

இதற்குக் காரணம் என்ன என்பது பற்றி மேலும் தெரிந்துகொள்ள 'செய்தி' மருத்துவர் பைசாலிடம் பேசியது. 

கடும் COVID-19 நோய்த்தொற்றுக்குப் பின்னர் அதன் விளைவுகளால்  நீண்ட காலம் பாதிக்கப்பட்டிருப்பது Long Covid என்று அழைக்கப்படுகிறது. 

Long Covid வந்தவர்களுக்கு விட்டு விட்டு வரும் காய்ச்சல் ஏற்படலாம் என்று டாக்டர் பைசால் கூறினார்.  அது சில வாரங்கள் அல்லது மாதங்களுக்குக் கூட நீடிக்கலாம். 

COVID-19 கிருமித்தொற்றுக்குப் பின்னர், 13.3 விழுக்காட்டினருக்குச் சளி, காய்ச்சல் போன்றவை ஒரு மாதத்திற்கு மேலாகத் தொடர்ந்து வந்து வந்து போனதாகத் தொற்றுநோய்க் கட்டுப்பாட்டு,  தடுப்பு நிலையம் நடத்திய ஆய்வு ஒன்று காட்டியுள்ளது. 

இருப்பினும் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட வாய்ப்பில்லை என்றார் டாக்டர் பைசால். 

ஆகையால், உடல் நலத்தைப் பாதுகாக்க...

- ஆரோக்கியமான உணவை உட்கொள்ளலாம்
- அடிக்கடி தண்ணீர் குடிக்கலாம்
-  போதிய அளவு ஓய்வெடுக்கலாம் 
-  உடற்பயிற்சி செய்யலாம்
-  காய்ச்சல் வந்தால், மருத்துவரை அணுகலாம்
-  சளிக்காய்ச்சல் தடுப்பூசி போட்டுக் கொள்வது நல்லது

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்