வனவிலங்குக் கடத்தல் - அறிகுறிகள் என்னென்ன?
படம்: Envato Elements
This audio is generated by an AI tool.
ஜூரோங் துறைமுகத்தில் அண்மையில் ஆசிய எறும்புத்தின்னிகளின் செதில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கருவாடு என்று குறிப்பிடப்பட்ட சரக்குப் பொதிக்குள் செதில்கள் இருந்தன.
அதிகாரிகள் நடத்திய சோதனையில் கடத்தல் அம்பலமானது.
அது போன்ற கடத்தல் சம்பவங்களைக் கண்டறிவது எப்படி? அறிகுறிகள் யாவை?
⚠️ சரக்குப் பொதி செல்லும் பாதை
கடத்தல்காரர்கள் நேரடிப் பாதையை விட்டுவிட்டு நீண்ட நெடிய பாதைகளைத் தேர்ந்தெடுக்கக்கூடும்.
அதிகாரிகளின் கண்காணிப்பிலிருந்து தப்புவது நோக்கம்.
சரக்குப் பொதி புறப்பட்ட பிறகு அது இறுதியாகச் சென்றடையும் இடத்தை மாற்றுவது கடத்தலின் ஓர் அறிகுறி.
அதுமட்டுமல்ல.
சரக்கு அனுப்பப்படும் நாட்டில் அதற்கான தேவை இருக்கிறதா என்று கவனிக்கவேண்டும்.
உதாரணத்திற்கு மீன்களை அதிகம் ஏற்றுமதி செய்யும் நாட்டிற்கு அதே வகை மீனை அனுப்பினால் அது சந்தேகத்தைத் தூண்டும்.
சரக்குப் பொதியில் வேறு கடத்தல் பொருள்கள் இருக்கலாம்.
⚠️ சரக்கின் எடை, தோற்றம்
சரக்கின் எடை ஆவணத்தில் குறிப்பிடப்பட்ட எடையுடன் ஒத்துப்போகவேண்டும்.
ஆவணத்தில் குறைவான எடை குறிப்பிடப்பட்டால் சரக்கின் தோற்றம் அதற்கு ஏற்றவாறு இருக்கவேண்டும்.
மாறாகச் சரக்கு பெரிதாகக் காணப்பட்டால் அது கடத்தல் பொருளாக இருக்கலாம்.
⚠️ சந்தேகத்திற்குரிய ஆவணம்
கடத்தல்காரர்கள் அசல் ஆவணத்தை வழங்காமல் அதன் பிரதியைச் சமர்ப்பிக்கக் கூடும்.
அவர்கள் காலாவதியான ஆவணத்தையும் பயன்படுத்தலாம்.
ஆவணத்தில் எழுத்துப் பிழைகள் அல்லது முரணான தகவல் இருக்கலாம்.
⚠️ கட்டண முறை
ரொக்கமாகக் கட்டணம் செலுத்துவது தவறு இல்லை.
ஆனால் தடயம் இல்லாமல் பரிவர்த்தனை செய்யக் கடத்தல்காரர்கள் ரொக்கத்தைப் பயன்படுத்தலாம்.
அது போன்ற அறிகுறிகள் பல உள்ளன.
அதிகாரிகள் அவற்றைக் கவனித்துக் கடத்தல்காரர்களைத் தடுக்கின்றனர்.