ரெட்ஹில் குளோஸ் அடுக்குமாடி வீட்டில் ஆடவர் மரணம் - அவருடன் வசித்தவர் சந்தேகத்தின் பேரில் கைது
வாசிப்புநேரம் -

(கோப்புப்படம்: Google Street View)
ரெட்ஹில் குளோஸின் அடுக்குமாடி வீட்டில் வாடகைக்கு இருந்தவரைக் கொலைசெய்த சந்தேகத்தின்பேரில் அவருடன் வசித்த 59 வயது ஆடவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இன்று (17 மார்ச்) காலை 11 மணியளவில் அந்தச் சம்பவம் குறித்துக் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.
அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்றபோது 61 வயது ஆடவர் பல்வேறு காயங்களோடு வீட்டுக்குள் அசைவின்றிக் கிடப்பதைக் கண்டனர்.
அதே வீட்டில் தங்கியிருந்த 59 வயதுச் சந்தேக நபர் அங்கேயே கைதுசெய்யப்பட்டார். நாளை அவர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்படும்.
சம்பவம் குறித்துக் காவல்துறையின் விசாரணை தொடர்கிறது.