பொதுத்தேர்தலில் போட்டி கடினமாகலாம் - லியோங் மன் வாய்
வாசிப்புநேரம் -

(படம்: CNA/Jeremy Long)
வெஸ்ட் கோஸ்ட் (West Coast) குழுத்தொகுதி எல்லைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிடுவது கடினமாகக்கூடும் என்று சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் லியோங் மன் வாய் (Leong Mun Wai) கூறியுள்ளார்.
புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் குழுத்தொகுதிகளில் ஒன்று வெஸ்ட் கோஸ்ட் - ஜூரோங் வெஸ்ட் (West Coast-Jurong West) குழுத்தொகுதி.
புதிதாய்ச் சேர்க்கப்பட்ட வட்டாரங்களில் குறைந்த நேரத்தில் வலம் வருவது, புதிய குடியிருப்பாளர்களைச் சந்திப்பது சிரமமானது என்று திரு லியோங் சொன்னார்.
கடந்த நான்காண்டுகளாக தெலூக் பிளாங்கா (Telok Blangah) குடியிருப்பாளர்களிடம் நெருக்கமாகப் பணியாற்றிவந்ததாக அவர் குறிப்பிட்டார்.
தற்போது புதிதாக 41,000 குடியிருப்பாளர்கள் வெஸ்ட் கோஸ்ட் - ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இன்று காலையில் தாமான் ஜூரோங் (Taman Jurong) சந்தை, உணவங்காடி நிலையத்தில் தொகுதி உலா சென்றிருந்தபோது திரு லியோங் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் புதுமுகங்களான ஸ்டெல்லா ஸ்டான் லீ (Stella Stan Lee), சுமர்லெக்கி அம்ஜா (Sumarleki Amjah), சானி இஸ்மயில் (Sani Ismail) ஆகியோரும் அங்கு காணப்பட்டனர்.

ஆதாரம் : CNA